ராஜபக்ஷக்களின் பிடியில் பிரதமர் ஜயரத்ன
Page 1 of 1
ராஜபக்ஷக்களின் பிடியில் பிரதமர் ஜயரத்ன
பிரதமர் டி.எம்.ஜயரத்ன ராஜபக்ஷ குடும்பத்தின் வலையில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே அவர் அண்மையில் விடுதலைப்புலிகளின் மூன்று முகாம்கள் தமிழகத்தில் இயங்குவதாக நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சில வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம், பிரதமரின் கருத்தினை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், அவர் விரைவில் பதவி நீக்கம் செய்யப்படுவார் எனவும், வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பிரதமர் தொடர்பில் ராஜதந்திரிகளிடம் பிழையான கருத்துக்களை முன்வைக்குமாறு வெளிநாட்டு அமைச்சரிடம் ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரதமரின் கூற்று தொடர்பில் அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இந்தியாவில் அவ்வாறான முகாம்கள் எவையும் இல்லை என இந்தியா நிராகரித்துள்ளமையானது இலங்கை அரசாங்கத்தின் வெற்றி என தெரிவித்தார்.
இது பிரதமரை பயன்படுத்தி, இந்தியாவின் நடவடிக்கை குறித்து அறிந்துக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அமைத்த வியூகமாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பிரதமர் பதவியில் இருந்து டி.எம்.ஜயரத்னவை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு ஜனாதிபதியின் சகோதரர், சபாநாயகர் சாமல் ராஜபக்ஷவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அத்துடன் தேர்தலுக்கு பின்னர் அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதன் போது வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் புதிய சபாநாயகராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கோரும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன
» மஹிந்த ராஜபக்ச மதவாத பிடியில் சிக்கியுள்ளார் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
» மஹிந்த ராஜபக்ச மதவாத பிடியில் சிக்கியுள்ளார் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum