பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கோரும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன
Page 1 of 1

பிரதமர் டீ.எம். ஜயரத்ன பாராளுமன்றத்தில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கோரிய சம்பவமொன்று இன்று நடைபெற்றுள்ளது.
அவசர காலச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க, அவசர காலச்சட்டத்தை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
யுத்தம் முடிவடைந்து இருபது மாதங்கள் கடந்த நிலையிலும் அவசர காலச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுவதானது, அரசாங்கத்தின் தேவைக்காக மட்டுமே என்று அவர் குற்றம் சாட்டினார். அதன் மூலம் அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க முயற்சிப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் டீ.எம். ஜயரத்ன, அனுர குமார திசாநாயக்க தனது பாராளுமன்ற உரையின் போது பாதுகாப்புச் செயலாளரின் பெயரை சம்பந்தப்படுத்தி உரையாற்றியதை கடுமையாகக் கண்டித்தார்.
அதுமட்டுமன்றி பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு பதிலளிக்க முடியாத உன்னதமான நபரான பாதுகாப்புச் செயலாளர் மீது களங்கம் பூசும் வகையில் சபையில் உரையாற்றுவது கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு அனுர குமார திசாநாயக்க பாதுகாப்புச் செயலாளரின் பெயரைக் குறிப்பிட்டு உரையாற்றியமைக்காக தான் கோத்தாபய ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன தனது உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» ராஜபக்ஷக்களின் பிடியில் பிரதமர் ஜயரத்ன
» பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகை: எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுமா?
» சச்சினிடம் மன்னிப்புக் கேட்டேன் : சேவாக் தெரிவிப்பு
» விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுற்றாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது: கோத்தாபய ராஜபக்ஷ
» ஐ.நா. பாதுகாப்புச் சபை நாடுகளுக்கு நிலைமையை விளக்க அரசு தயார்! சிக்கலைச் சமாளிக்க அதிதீவிர முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum