அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இரத்மலானை விமானப்படைத்தள விஸ்தரிப்புக்கு இந்தியா உதவி

Go down

இரத்மலானை விமானப்படைத்தள விஸ்தரிப்புக்கு இந்தியா உதவி  Empty இரத்மலானை விமானப்படைத்தள விஸ்தரிப்புக்கு இந்தியா உதவி

Post by Admin Tue Mar 15, 2011 3:14 pm

இரத்மலானை விமானப்படைத்தள புனரமைப்பு மற்றும் விஸ்தரிப்புச் செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரத்மலானையில் அமைந்துள்ள விமானப்படைத்தளம் மற்றும் விமான நிலைய புனரமைப்பு மற்றும் விஸ்தரிப்புப் பணிகளுக்கு உதவ இந்திய நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

அதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய நிறுவனத்துக்கும் இடையில் மிக விரைவில் கைச்சாத்திடப்படும் என்று சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே பலாலி விமானப்படைத்தளத்தின் விஸ்தரிப்பு செயற்பாடுகளிலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கிவரும் நிலையில் இரத்மலானை விமானப்படைத்தள விஸ்தரிப்புக்கும் இந்தியாவே அனுசரணை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பலாலி மற்றும் இரத்மலானை விமானப்படைத்தளங்களின் விஸ்தரிப்புச் செயற்பாடுகளை ஏக காலத்தில் முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.


இரத்மலானை விமானப்படைத்தள விஸ்தரிப்புக்கு இந்தியா உதவி  Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum