திருகோணமலை மாவட்ட வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் உதவி
Page 1 of 1

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டும் கடந்த யுத்த சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டும் இன்றுவரை தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல் இடைத்தங்கல் முகாம்களில் கிளிவெட்டி பட்டித்திடல் மணற்சேனை கட்டைபறிச்சான் போன்ற இடங்களில் 1200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.
சம்பூர் கடற்கரைச்சேனை நவரெத்தினபுரம் கூனித்தீவு சூடைக்குடா போன்ற கிராம மக்களே இவர்கள் ஆகும். கட்டைபறிச்சானில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு 26.02.2011ம் திகதி அன்று லண்டன் சைவத்திருக்கோயில் ஒன்றியத்தின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. மூதூர் பிரதேச செயலாளர் திரு.ஏ.செல்வநாயகம் அவர்களின் வேண்டுதலில் இவ்உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
மூதூர் பிரதேச செயலாளரின் சார்பில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு.எஸ்.பொன்னித்துரை கலந்து கொண்டார். இந்நிகழ்வில் உரை வழங்கிய திரு.எஸ்.பொன்னித்துரை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எமது தமிழ் மக்களின் துன்பத்தை துடைப்பதற்கு லண்டனின் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் நிதி உதவி மூலம் லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மூலம் இவ்உதவியை வழங்கி உள்ளது. இதற்காக எங்கள் பிரதேச செயலகம் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
அத்தோடு பல போக்குவரத்து சிரமத்தின் மத்தியில் இவ்உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை கொண்டுவந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். இதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்உதவியை லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றிய அமைப்பு மூலம் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் லண்டன் சிவன் ஆலயம் லண்டன் முருகன் ஆலயம் லண்டன் நாகபூசனி அம்மன் ஆலயம் லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் அவர்களுடன் இணைந்து லண்டன் சைவ முன்னேற்றச் சங்கம் வழங்கிய நிதி உதவியிலேயே இவை வழங்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
போக்குவரத்து கிரமம் காரணமாக இன்று இம்முகாமில் உள்ள 343 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படுவதாகவும் ஏனைய இடைத்தங்கல் முகாமில் வாழும் மக்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இவ்உதவி புரிந்த லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியத்துக்கு தங்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். இப்பொதியில் அரிசி சீனி தேயிலை கோதுமைமா பருப்பு சோயாமீற் போன்றவை அடங்கி இருந்தது.
கடந்த யுத்தவேளையின் போது 2006 2007ம் ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சம்பூர் கூனித்தீவு சூடைக்குடா கடற்கரைச்சேனை நவரெட்ணபுரம் சந்தோசபுரம் கட்டபறிச்சான் வடக்கு கட்டபறிச்சான் தெற்கு அம்மன்நகர் சேனையூர் உட்பட்ட கிராமமக்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்த போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பெரும் உதவிகளை இம்மக்களுக்கு வழங்கியதுடன் ஒரு சில முகாம்களை பொறுப்பேற்று ஒரு சில காலங்களுக்கு பராமரித்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையிலும் எமது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து மேலைநாடுகளில் வாழும் எமது உறவுகளின் உதவியே இம்மக்களை பராமரிப்பதற்கு உதவியதை பேரவைத் தலைவர் மக்கள் மத்தியில் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். இவ்உதவியைப் புரியும் மக்களுக்கு நீங்களும் நாங்களும் என்றும் கடமைப்பட்டவர்களாக உள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் உள்ள பாலத்தோப்பூர் பகுதியில் வெள்ளத்தால் பெரிதாக பாதிக்கப்பட்ட மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற பிரதேச செயலாளரின் வேண்டுதலில் 85 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. இந்நிகழ்வில் அக்கிராம அதிகாரியும் கலந்து கொண்டு எற்பாடுகளை மேற்கொண்டார்.
இவ்விரு நிழ்வுகளிலும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இணைப்பாளர் திரு.வ.நவநீதன் பேரவையில் ஆலோசகர் திரு.ச.ஜெயகரன் பேரவையின் நிருவாக உத்தியோகத்தர் திரு.பி.நந்தகோபன் பேரவையின் வெல்லாவெளிப் பிரதேச பொறுப்பாளர் திரு.கி.ரவீந்திரராசா பேரவையின் உறுப்பினர் திரு.ச.விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.
அத்தோடு சம்பூர் தற்போதைய நிலவரம் குறித்து இடம்யெர்;ந்த மக்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உரையாடினார். இம்மக்கள் தங்களது பூமியை அரசாங்கம் சுவீகரித்து இராணுவ தளம் கடற்படைத் தளம் அமைப்பதையும் தங்களது இலாபத்துக்காக தொழிற்சாலைகள் அனல்மின் நிலையம் அமைப்பதையும் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் விரைவாக தங்கள் இடங்களில் குடியேற எற்பாடு செய்து தருமாறும். இவ் இடைத்தங்கல் முகாம் வாழ்வை 05 வருடத்துக்கு மேலாக பல துன்பங்களுக்கு மத்தியில் அகதிகளாக இருந்து அனுபவித்து வருவதாகவும் தங்கள் வேதனையை தெரிவித்தனர். இம்மக்களின் துயர்துடைக்க இயன்றவரை நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உறுதியளித்தார்.

Similar topics
» இரத்மலானை விமானப்படைத்தள விஸ்தரிப்புக்கு இந்தியா உதவி
» திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது
» திருகோணமலை மீள்குடியேறிய மக்களுள் நால்வரை ஆயுதமுனையில் கடத்தல்
» மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு
» தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum