உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்
Page 1 of 1
உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் 658 பேருக்கு பணி நியமன கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை (டிசம்பர் - 2) நடைபெற உள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து அனுப்பப்பட்ட தெரிவுக் கடிதத்தை எடுத்து வர வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தையல் ஆசிரியர்கள் 186 பேருக்கும், இசை ஆசிரியர்கள் 86 பேருக்கும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் பணி நியமன கலந்தாய்வு காலை 9 மணிக்கு நடைபெறும்.
கலந்தாய்வில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் டிசம்பர் 3-ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அதற்குத் தயாராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.
தட்டச்சர்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் பணி நியமன கலந்தாய்வு டிசம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
தேர்வாணையத்தால் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல்
www.pallikalvi.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள் தேர்வாணையத்தில் இருந்த பெற்ற அறிவிப்பு கடிதம், தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றை கலந்தாய்வுக்கு கொண்டு வர வேண்டும்.

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» நியூசிலாந்து அணியின் தொடர் தோல்வி: பயிற்சியாளராக ஜோன்ரைட் நியமனம்
» விமானப்படைத் தளபதியாக புதியவர் நியமனம்: தமிழருக்கான வாய்ப்பு தவறிப் போனது
» விமானப்படைத் தளபதியாக புதியவர் நியமனம்: தமிழருக்கான வாய்ப்பு தவறிப் போனது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum