நியூசிலாந்து அணியின் தொடர் தோல்வி: பயிற்சியாளராக ஜோன்ரைட் நியமனம்
Page 1 of 1

அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டி தொடரில் 0-5 என்ற கணக்கிலும் நியூசிலாந்து அணி தோல்வி கண்டது.
அதற்கு முன்னதாக நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 0-4 என்ற கணக்கில் தோற்றது. எனவே இதனை கருத்திற் கொண்டு நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக ஜோன்ரைட் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ண போட்டிக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் நியூசிலாந்து அணி தொடர்ந்து 11 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அணி நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் சபை ஆலோசனை நடத்தியது.
இதன் முடிவில் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மார்க் கிரேட்பேச் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் அணி தலைவர் ஜோன்ரைட் நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான ஜோன்ரைட் இந்திய அணியின் பயிற்சியாளராக 5 ஆண்டுகள் (2000-2005) இருந்தவர் ஆவார். அவரது பயிற்சி காலத்தில் 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
2012-ஆம் ஆண்டு வரை ஜோன்ரைட் பயிற்சியாளர் பொறுப்பில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து நியூசிலாந்து அணி எதிர்வரும் 26- ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஜோன்ரைட் ஏற்க உள்ளார்.
தேர்வாளர் பொறுப்பில் இருந்து அணி தலைவர் விட்டோரி நீக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மார்க் கிரேட்பேச் 3 பேர் கொண்ட தேர்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதோடு துடுப்பாட்ட பயிற்சியாளராக இருப்பார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஜோன்ரைட் பயிற்சாளர் குறித்து கருத்து தெரிவிக்கையில், பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது பெரிய சவாலாகும். இது பயிற்சியாளர் பதவியில் எனது பலத்தை பரிசோதிப்பதாகும். நியூசிலாந்து வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவும், மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி நம்பிக்கை பெறவும் முயற்சி மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் நியூசிலாந்து அணிக்கு நியமிக்கப்படும் 4- வது பயிற்சியாளர் ஜோன்ரைட் என்பது குறிப்பிடத்தக்கது.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்
» மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில்
» இந்திய அணியின் வெற்றிக்கு பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்கள் மீது வழக்கு
» விமானப்படைத் தளபதியாக புதியவர் நியமனம்: தமிழருக்கான வாய்ப்பு தவறிப் போனது
» திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வி அடையும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum