அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு

Go down

வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு  Empty வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு

Post by VeNgAi Thu Mar 17, 2011 3:23 pm

வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகளை அண்டிய 500 மீற்றர் தூரத்தில் எவரும் தேவையில்லாமல் சஞ்சரிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களை பிடி விராந்து இன்றி கைது செய்யுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வாக்காளர்கள் மீது எந்த வகையிலேனும் அழுத்தங்களை பிரயோகிப்பவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த விசேட பிரிவு செயற்படும் என தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை பிரதேசங்களில் இடம்பெறும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 011 2 877 634 என்ற தொலைநகல் முகவரிக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் 011 2 877 635 என்ற இலக்கத்தின் ஊடாகவும்,

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் 011 2 877 637 என்ற இலக்கத்தின் ஊடாகவும்,

தொலைநகல்களின் மூலம் அல்லது எழுத்து மூலம் முறைப்பாடு செய்ய முடியும்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு
» காதலர் தின எதிர்ப்பை கைவிட்டுவிட்டோம்: சிவசேனை இளைஞர் பிரிவு
» ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்
» போர்க்குற்றத் தகவல்களை இரகசியமாக வெளியிட்ட 6 இணையத்தளங்களை புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிப்பு - திவயின
» ஜப்பான் அனர்த்த நிலைமை குறித்து போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டாமென கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum