அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போர்க்குற்றத் தகவல்களை இரகசியமாக வெளியிட்ட 6 இணையத்தளங்களை புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிப்பு - திவயின

Go down

போர்க்குற்றத் தகவல்களை இரகசியமாக வெளியிட்ட 6 இணையத்தளங்களை புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிப்பு - திவயின  Empty போர்க்குற்றத் தகவல்களை இரகசியமாக வெளியிட்ட 6 இணையத்தளங்களை புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிப்பு - திவயின

Post by Admin Wed Jan 05, 2011 1:02 am

2009 மே மாதத்தில் அரச படையினரின் இறுதிக் கட்ட யுத்த நடவடிக்கைகளின் போது ஷெல் வீச்சு மற்றும் விமானக் குண்டு வீச்சுகளை மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் இந்த வகையில் பொதுமக்களைக் குறிவைத்தது. மிகப்பாரதூரமான போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகவும்.....
.....அவ்வாறே வெள்ளைக் கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் அனைவரும் ஸ்தலத்திலேயே வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இவ்வாறு போர்க் குற்றங்கள் இழைக்கப்படுவதற்கான கட்டளைகளை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷவும் படைத் தலைவர்களுமே வழங்கியதாகவும் 2009 மே மாத இறுதியில் பல்வேற தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அரச தலைவர்கள் படைத்தலைவர்களுக்கு எதிராகப் போர்க் குற்றங்களைச் சுமத்தி அவர்களைச் சர்வதேச போர்ச் சட்டங்களுக்கு எதிரான போர்க் குற்றவாளிகளாக்குவதற்கான சர்வதேசப் புலிகள் இயக்கத்தினரினதும் ஆதரவான அரச தரப்பினரினதும் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகளை முதலாக ஊடகங்களின் முயற்சிகள் தொடர்ந்து இன்று வரை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஸ்ரீலங்கா அரச தரப்பினரைப் போர்க் குற்றவாளிகளாக்கும் முயற்சிகளில் முக்கிய பங்காக ஊடக அமைப்புகளே வகிக்கின்றன. ஏனெனில் குற்றங்களை நிரூபிப்பதற்கான தகவல்களை ஊடகங்கள் மூலமும் ஊடகத்தைச் சார்ந்தோர் மூலமுமே சர்வதேசப் புலிகள் இயக்கத்தினரும் வெளிநாட்டு அரச தரப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளும் பெற்று வந்துள்ளன. தொடர்ந்தும் பெற்று வருகின்றன. இதுபற்றி பிரிட்டிஷ் பிரதமரே ஒரு கட்டத்தில் தெரிவித்த போது இலங்கை அரசுக்கு எதிரான தகவல்கள் தொடர்ந்து கிடைத்த வண்ணமிருப்பதாகக் கூறியிருந்தார்.

இவ்வாறு சர்வதேச புலிகள் இயக்கத்தினருக்கு ஆதரவாளர்களாகவே இலங்கையிலிருந்து இரகசியமாகச் செயற்படும் ஊடகத்தரப்பினர் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தோர் அரசியல் கட்சியினர் மற்றும் தனிநபர்களல்ல பெரும்பாலும் இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மூலம் அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை மற்றும் மனித உரிமை மீறல்களை நிரூபிக்கும் வகையின் தகவல்கள் தினமும் அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையிலும் மற்றும் இரகசியத் தொடர்புகள் மூலமும் இத்தகவல்கள் அடங்கிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள், வீடிடோ இறுவெட்டுகள் அவற்றின் பிரதிகள் மற்றும் இணையத் தகவல்கள், மின்னஞ்சல்களை அடிப்படையாக வைத்தே அண்மைக் காலங்களில் சனல் 4, சனல் 7, பி.பி.சி., அல்ஜசீரா, விக்கிலீக்ஸ் ஆகியன இலங்கை அரசு மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக ஐ.நா. சபை விசாரணைகளுக்கும் மற்றும் சர்வதேச நீதி விசாரணைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய சட்டரீதியான பெறுமானமுள்ள பல்வேறு தகவல்கள், காட்சிகள் பத்திரப்பிரதிகள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளன.

இவற்றில் முன்னர் வெளியான லண்டன் சனல் 4 இறுவெட்டுக் காட்சிகளும் தகவல்கள் அண்மையில் வெளியான அல் ஜசீரா தகவல்கள் காட்சிகளும் இலங்கை மீது போர்க்குற்றங்களைச் சுமத்துவதற்கு விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதற்குமான சர்வதேச அழுத்தத்தைத் தூண்டியுள்ளன.

இந்நிலையில் இலங்கை அரசு இவ்வாறு நாட்டிலிருந்து கொண்டு அரசுக்கு எதிரான போர்க் குற்றவாளிகள் மனித உரிமை மீறல் குற்றங்களை நிரூபிப்பதற்கான போலியான தகவல்களையும் சாட்சிகளையும் அனுப்பிவரும் தரப்பினர் மீதான புலன்விசாரணை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த வகையில் ஊடகத் தரப்பினர்கள் மீதும் அரசு சார்பற்ற நிறுவனத்தரப்பினர் அரசுக்கு எதிரான உள்நாட்டவர்களை அரச புலனாய்வுத்துறையினர் முற்றிலும் சந்தேகத்தை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இவ்வாறு அரசுக்கு எதிராகத் தகவல்களைச் சேகரித்துவரும் நபர்கள் சம்பந்தமாகவும் இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மூலமாக அரசுக்கு எதிரான தகவல்களை அனுப்பி வருவோர் சம்பந்தமாகவும் புலனாய்வுப்பிரிவினர் இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் தேடுதல்களிலிருந்து அவ்வாறான நபர்கள், நிறுவனங்கள் பற்றிய உறுதியான தகவல்களை வன்னி, யாழ்ப்பாணம், கொழும்பு முதலாக நாடெங்குமுள்ள புலனாய்வுப் பிரிவுக்கு நம்பகரமான வட்டாரங்கள், ஊடகங்கள், உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இவர்கள் மீதான கடுமையான விசாரணை நடவடிக்கைகளை புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்துள்ளதுடன் மேலும் புலனாய்வுத்துறை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு இலங்கை அரச தலைவர்களைப் போர்க் குற்றவாளிகளாக்கும் வகைகளில் போலியான தகவல்களை வழங்கி வந்த ஆறு இணையத்தளங்கள் மற்றும் அவற்றை நடத்தி வந்த நபர்கள் நிறுவனங்கள் அவற்றின் பின்னணியில் செயற்படும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புகள் பற்றிய உறுதியான தகவல்களைத் தற்போது புலனாய்வுப் பிரிவு பெற்றுள்ளதாக இராணுவ புலனாய்வு வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்த இணையத்தளங்களுடன் சம்ந்தப்பட்டவர்களில் கூடுதலானோர் ஊடகங்களுடன் சேர்ந்த நபர்களே எனவும் இவர்கள் முகத்துவாரம் மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் இயங்குவதாகவும் அத்துடன் குறிப்பிட்ட வெளிநாடுகளிலிருந்து செயற்படுபவர்களிலும் இவர்களில் அடங்குவர் எனவும் இவர்களில் குறிப்பிட்டதொரு நபர் பிரபாகரன் கொல்லப்பட்டவுடன் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிவர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum