ஐ.பி.எல். ஏலம்: சச்சின், சேவாக், தோனி இப்போதுள............
Page 1 of 1

2011, 2012-ம் ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு ஜனவரி 9, 10 தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், முன்னணி வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், மகேந்திர சிங் தோனி, ஹர்பஜன் சிங் ஆகியோரை அவர்கள் இப்போது இடம்பெற்றுள்ள அணிகளே தக்கவைத்துக் கொண்டுள்ளன.
அதே சமயம் கெüதம் கம்பீர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் ஏலத்தில் இடம்பெறுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணி வீரர்களை மீண்டும் தக்கவைத்துக்கொள்வது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு புதன்கிழமையே கடைசி நாளாகும். இந்நிலையில், சில முன்னணி வீரர்கள் இப்போது தாங்கள் இடம் பெற்றுள்ள அணிகளிலேயே நீடிப்பார்கள் என தெரியவந்துள்ளது.
மும்பை இண்டியன்ஸ்: மும்பை அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரை அந்த அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதே போல், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கெய்ரன் பொலார்டு, இலங்கை வீரர் லசித் மலிங்கா ஆகியோரும் அடுத்த இரண்டு சீசன்களுக்கும் மும்பை அணிக்காவே விளையாடுவர் என அந்த அணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை அணி: கடந்த முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இப்போதுள்ள வீரர்கள் பெரும்பாலோர் நீடிப்பர் எனத் தெரிகிறது. மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மோர்க்கல் உள்ளிட்டோரை இழக்க அந்த அணித் தயாராக இல்லை.
டேர்டேவில்ஸ்: டெல்லி அணியைப் பொறுத்தவரை வீரேந்திர சேவாக் அடுத்த இரண்டு சீசன்களுக்கும் அந்த அணியிலேயே நீடிப்பார். ஆனால், கெüதம் கம்பீரை தக்கவைத்துக்கொள்ள அந்த அணி விரும்பவில்லை.
நைட் ரைடர்ஸ்: 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷாரூக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அடுத்த இரண்டு சீசன்களிலும் முத்திரைப் பதிக்கவில்லை. அந்த அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி அணியில் மீண்டும் நீட்டிக்கப்படவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் மட்டுமே அந்த அணியின் நம்பிக்கையாக உள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ்: 2010 ஐ.பி.எல். போட்டியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்கள் அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட் இருவரின் ஒப்பந்தத்தையும் பெங்களூர் அணி நீட்டிக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் ஏலத்தின் போது பிற அணிகளால் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. விராட் கோலி மட்டும் தொடர்ந்து அணியில் நீடிக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஒப்பந்த விதிமீறல் தொடர்பாக ஐ.பி.எல். போட்டியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நீக்கப்பட்டது. பி.சி.சி.ஐ.யின் இந்த முடிவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அந்த அணி வழக்குத் தொடர்ந்துள்ளது. இதற்கிடையே, அந்த அணியின் கேப்டன் ஷேன் வார்னே, ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஆகியோர் அணியில் தொடர்ந்து நீடிப்பதாக அந்த அணி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் அணி: பி.சி.சி.ஐ.க்கு எதிராக பஞ்சாப் அணி தொடர்ந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வீரர்களை தக்கவைத்துக்கொள்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு அந்த அணி சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணி விவரம் குறித்தத் தகவல்கள் தெரியவில்லை. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி முதல் கொச்சி, பூனா அணிகளும் புதிதாக இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
""ஐ.பி.எல். அணிகளில் தொடர்ந்து நீடிப்போரின் அதிகாரபூர்வ விவரம், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகே வெளியிடப்படும்'' என ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி சுந்தர் ராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» சச்சினிடம் மன்னிப்புக் கேட்டேன் : சேவாக் தெரிவிப்பு
» எனது மகனை கிரிக்கெட் வீரனாகுமாறு கட்டாயப்படுத்தமாட்டேன்: சச்சின்
» எனக்குப் பிடித்த வீரர் சச்சின்: டேரன் பிராவோ
» நாய்க்கு சச்சின் பெயரை வைத்த தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum