டேவிஸ் கோப்பை அணி!
Page 1 of 1
டேவிஸ் கோப்பை அணி!
டேவிஸ் கோப்பை டென்னிஸின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வென்று கைப்பற்றிய கோப்பையுடன் செர்பிய டென்னிஸ் அணியினர்.................
devid- மட்டுறுத்துனர்
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 620/5 (டிக்ளேர்)
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. திங்கள்கிழமை நடந்த 4-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 620 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 375 ரன்கள் கூடுதலாகும்.
3-ம் நாள் ஆட்டத்தின்போது இரட்டை சதமடித்த இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 227 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து தனது 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், துவக்க ஆட்டக்காரர் வாட்சன் அரை சதமடித்தார். சிறப்பாக விளையாடி அணியின் ரன் உயர்வுக்கு வழிவகுத்த துணைக் கேப்டன் மைக்கேல் கிளார்க் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
4 விக்கெட் இழப்புக்கு 513 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் திங்கள்கிழமை தனது முதல் இன்னிங்ûஸத் தொடர்ந்தது இங்கிலாந்து. மேற்கொண்டு 14 ரன்கள் சேர்த்து 227 ரன்களில் பீட்டர்சன் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன்குவிப்பு இதுவாகும். இதற்குமுன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 226 ரன்கள் குவித்திருந்தார் அவர்.
எப்படியும் ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும் என்ற நிலையில், இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாகவே விளையாடினர். 9 ஓவர்களில் அந்த அணி 69 ரன்கள் குவித்தது. அணியின் ஸ்கோர் 620-ஆக இருந்த போது இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் முதல் இன்னிங்ûஸ டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன் குவிப்பு இதுவேயாகும். இயான் பெல் 68 ரன்களுடனும், பிரையர் 27 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிறப்பான தொடக்கம்
375 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்ûஸத் தொடங்கியது ஆஸ்திரேலியா. துவக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் 57 ரன்களும், சைமன் காடிச் 43 ரன்களும் குவித்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். எனினும், அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். காடிச், பாண்டிங் இருவரது விக்கெட்டுகளையும் ஸ்வான் வீழ்த்தினார்.
அடுத்து வந்த துணைக் கேப்டன் மைக்கேல் கிளார்க் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் விளையாடினார். இங்கிலாந்து வீரர்களின் பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார்.
கடைசி பந்தில் அவுட்
அணி வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு வழிவகுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பீட்டர்சன் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் அலாஸ்டர் குக்கிடம் கேட்ச் கொடுத்தார் கிளார்க். முதலில் இதை அவுட் இல்லை என நடுவர் டோனி ஹில் அறிவித்தார். பின்னர், இந்தத் தீர்ப்புக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் முறையிட்டதில், கிளார்க் அவுட் என்பது உறுதி செய்யப்பட்டது. 4-வது விக்கெட்டுக்கு கிளார்க் - மைக் ஹசி ஜோடி 104 ரன்கள் குவித்தது.
4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. மைக் ஹசி 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இன்னும் 137 ரன்கள் தேவை.
இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகள் விரைவிலேயே வீழ்த்தப்படும் பட்சத்தில், 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா 245, இங்கிலாந்து 620-5வி டிக்ளேர் (பீட்டர்சன் 227, இயான் பெல் 68*, பிரையர் 27*; ஹாரிஸ் 2வி-84)
2-வது இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா 238-4வி (வாட்சன் 57, காடிச் 43, கிளார்க் 80, ஹசி 44*; ஸ்வான் 2வி-72)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum