அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது கூட்டமைப்பு தீர்வை முன்வைத்துப் பேச வேண்டும்

Go down

பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது கூட்டமைப்பு தீர்வை முன்வைத்துப் பேச வேண்டும்  Empty பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது கூட்டமைப்பு தீர்வை முன்வைத்துப் பேச வேண்டும்

Post by VeNgAi Sun May 01, 2011 7:48 pm

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இலங்கை காட்டமாகப் பதிலளித்துக் கொண்டிருக்கின்றது. மறுபுறம் பெரும்பாலான சிங்கள, ஆங்கில ஊடகங்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும், துடைத்தெறியப்பட்டதாகவும் கூறப்படுகின்ற விடுதலைப் புலிகளை வைத்துக் கொண்டு பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளன.
மேற்குலக ஊடகங்களும், இணையத்தளங்களும் போர்க் குற்றம் தொடர்பான காட்சிகளை, படங்களைப் பதிவு செய்து கொண்டிருக்க மறுபுறம் இலங்கையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற காட்சிகளையும், படங்களையும் மீள் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

சிங்கள, ஆங்கில ஊடகங்களில் பெரும்பாலானவை ஒருபடிமேல் போய் ஐ.நா அதன் செயலாளர் பான் கீ மூன், அவர் அமைத்த நிபுணர் குழு ஆகியோரை விடுதலைப் புலிகளின் மீள் வரவாக அல்லது புலிகளின் பிரதிபிம்பமாக சித்தரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

ஐ.நா.நிபுணர் குழுவைப் பொறுத்து இலங்கை அரசாங்கத்தை மாத்திரமல்ல விடுதலைப் புலிகளையும் தனது அறிக்கையில் குற்றம் கண்டுள்ளது. அதற்கும் அப்பால் நிபுணர் குழு ஐ.நா.வையும், சர்வதேச அரசியல் தலைமைத்துவங்களையும் வன்னி இறுதிப் போரில் பொது மக்களைக் காப்பாற்றத் தவறியமை பற்றியும் குற்றம் கண்டுள்ளது.

ஆனால் அதற்கு எதிராக தமிழர் தரப்பில் சிலரும் அறிக்கை விடுவதும், உண்ணாவிரதம் இருப்பதும் விசித்திரமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது.

வன்னிப் போரில் உயிரிழந்த அந்த ஆத்மாக்கள் இவர்களை மன்னிக்கட்டும். கல்லறைகளோ, சவக்குழிகளோ இல்லாது காற்றுடன் கலந்து விட்ட அந்த ஆத்மாக்கள் ஐ.நா. நிபுணர் குழுவினரை வானத்தில் திரண்டு நின்று வாழ்த்தட்டும்.

போரின் போது முதலில் பலியாவது உண்மை என்று கூறுவார்கள். ஆனால் இலங்கையில் தமிழர் விவகாரத்தில் உண்மை எப்பொழுதுமே சாகடிக்கப்படுகின்றது. அத்துடன் தமிழர் விவகாரத்துக்கெதிரான பரப்புரையும் தமிழர் விவகாரத்தை தலை கீழாக்கி விட்டுச் சென்று விடுகின்றது.

இதனை இலங்கை வரலாற்றில் தொடர்ச்சியாக அவதானிக்க முடியும்.

இலங்கையில் உண்மைகள் சாகடிக்கப்படலாம். ஆனால் உலகத்தின் மனச்சாட்சியின் முன் உண்மை சாகடிக்கப்பட இயலாது என்பதையே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெளிவுபடுத்தி நிற்கின்றது.
இலங்கை பல்லின, பல மொழி இனத்தைக் கொண்ட நாடு என்பதை அங்கீகரித்துப் பேசியவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களாவார்.

இந்தக் கருத்தியலின் அடிப்படையிலேயே அவர் சமஷ்டி ஆட்சி முறை இலங்கையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென்று அன்று கோரிக்கை விடுத்தார்.

சமஷ்டி பற்றிய சிங்களத் தலைவர்களின் கோரிக்கை தனி நாட்டுக்கு வழி வகுத்துவிடும், அல்லது அது தனி நாட்டுக் கோரிக்கையென எவரும் வாதாட முன்வர வில்லை.

ஆனால் தமிழர்கள் சமஷ்டி பற்றிப் பேசும் போதெல்லாம் அது தனி நாட்டுக் கோரிக்கை, சமஷ்டி கொடுத்தால் அது தனிநாட்டுக்கு வழி வகுத்துவிடும் என்று சிங்களத் தரப்பு பலமாக பேசத் தொடங்கிவிடுகின்றது.

தந்தை செல்வா காலத்தில் இருந்து இதனை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும், சமஷ்டி குறித்த கருத்தியலையும் தனி நாட்டுக்கான பாதையென பிரசாரப்படுத்திக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்ந்தும் மீண்டும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதால் எட்டப் போவது என்ன என்ற கேள்வி எழும்புகின்றது.

கூட்டமைப்பு அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியவுடன் மேற்கூறிய பிரசாரங்கள் தென்னிலங்கையில் முன்னெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டுதல் பொருந்தும்.

இந்த ஒரு நிலையில் மீண்டும் அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதிகாரங்களின் பட்டியல் பற்றி அடுத்தடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஆராய்வது என்றும் கூட்டமைப்பும், அரசாங்கத் தரப்பும் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழ் மக்களோ அவர்களின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் கூட்டமைப்பினரோ தனி நாடு கேட்கவில்லையென்பது தெரிந்த விடயமே.

இந்த நிலையில் மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை பொறிக்குள் சிக்கி காலத்தை விரயமாக்குவதை விடுத்து கூட்டமைப்பு தான் தயாரித்து வைத்துள்ளதாகக் கூறுகின்ற தீர்வுப் பொதியை முன் வைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதே சாலச் சிறந்தது.

வி.தேவராஜ்
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்
» வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு
» அரசாங்கம் - தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்! இரு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு
» அரசியல் கள நிலவரங்கள் குறித்து சம்பந்தனுடன் சென்னையில் த.கூட்டமைப்பு மந்திராலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum