அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Go down

வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு  Empty வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Post by Admin Thu Mar 17, 2011 2:11 pm

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு என்ற இடத்தில் இருக்கக்கூடிய வயல் நிலங்கள், குடிமனைகள் உள்ளடங்கலாக ஏறத்தாழ 2500 ஏக்கர் நிலப்பரப்பை ஏற்கனவே இராணுவம் ஆக்கிரமித்து அந்த மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த மக்களுக்கு வாழ்விடமும் கிடையாது, வாழ்வாதாரத்திற்கான வயல் நிலமும் கிடையாது.

இப்பொழுது முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, அம்பலவன் பொக்கணை என்ற மூன்று கிராம சேவையாளர் பிரிவைச் சார்ந்த 20 சதுர கிலோ மீற்றர் நிலத்தில் வாழ்ந்து வந்த 5300 குடும்பங்கள் மீளக்குடியமர இராணுவத்தின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை அந்த இடங்களில் குடியேற்ற முயற்சி எடுக்க வேண்டாம் எனவும் முல்லைத்தீவு அரச அதிபர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

2011 மார்ச் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு அரசாங்க அதிபரை சந்தித்த கேணல் தர அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக அறியப்படுகின்றது.

இந்த 20 சதுர கிலோமீற்றர் பரப்பளவானது மக்களின் குடிமனைகளையும் அவர்களின் வாழ்வாதாரமான கடற்றொழிலை உள்ளடக்கிய சாலை, மாத்தளன் போன்ற கடற்கரைகளையும் உள்ளடக்கிய பிரதேசமாகும்.

திருகோணமலையின் சம்பூர் கிராமத்தில் 10,000 ஏக்கரை எடுத்துள்ள இலங்கை பாதுகாப்புத்துறை மன்னாரில் முள்ளிக்குளம், சன்னார் போன்ற பிரதேசங்களையும், ஏ-9 வீதியில் பாரிய நிலப்பரப்புக்களையும் தன்னகத்தே எடுத்துள்ளது.

வடக்கு-கிழக்கை இராணுவ மயப்படுத்தல், சிங்கள பௌத்த மயப்படுத்தல் என்ற இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இவை நடைபெற்று வருகின்றது.

சம்பூர், முள்ளிக்குளம், கேப்பாப்புலவு, சன்னார், திருமுறிகண்டி மக்களின் வரிசையில் இன்று முள்ளிவாய்க்கால், அம்பலவன் பொக்கணை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் நடுவீதிக்கு விரட்டப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை மிக விரைவாக மீள்குடியேற்றம் செய்கின்றோம் என்று சர்வதேச ரீதியில் பிரசாரம் செய்து வரக்கூடிய அரசு, எத்தனை ஆயிரம் மக்களின் மீள்குடியேற்றத்தை மறுத்துள்ளது என்பதை சிங்கள மக்களும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.

அது மாத்திரமல்லாமல் இம்மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேற அனுமதிக்கும் படி இலங்கை அரசை வற்புறுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோருகின்றோம்.

சுரேஸ் பிறேமச்சந்திரன் பா.உ
பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு  Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum