அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*பிரகாஷ்ராஜ் சினிமாவில் மட்டும் வில்லனல்ல!: ஜீவன் ஆதங்கம்*~*

Go down

*~*பிரகாஷ்ராஜ் சினிமாவில் மட்டும் வில்லனல்ல!: ஜீவன் ஆதங்கம்*~* Empty *~*பிரகாஷ்ராஜ் சினிமாவில் மட்டும் வில்லனல்ல!: ஜீவன் ஆதங்கம்*~*

Post by Tamilkings Thu May 05, 2011 6:10 pm

பிரகாஷ்ராஜ் சினிமாவில் மட்டும் வில்லனல்ல!: ஜீவன் ஆதங்கம்


*~*பிரகாஷ்ராஜ் சினிமாவில் மட்டும் வில்லனல்ல!: ஜீவன் ஆதங்கம்*~* Mayilu%20Movie-reel%204

ஐயோ பாவம்..!. இப்படிதான் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது இவரை! 'மைனா' பட ஒளிப்பதிவாளர் சுகுமாறனின் சகோதரர் ஜீவன். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் உருவான 'மயிலு' படத்தின் இயக்குநர் இவர். சொன்ன நேரத்தில் இப்படம் வெளிவந்திருந்தால் இப்படி அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே வந்திருக்காது. அப்படி ஒரு ஜீவனுள்ள படமாம் இந்த ஜீவன் இயக்கிய 'மயிலு'. பிரகாஷ்ராஜ் மற்றும் மோசர் பேர் நிறுவனத்தின் அலட்சியத்தால் மூன்றரை வருடங்களாக தியேட்டரை பார்க்க முடியாமல் பெட்டிக்குள்ளேயே கிடக்கிறாள் மயிலு. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ஜீவன், 'பிரகாஷ்ராஜ் சினிமாவில் மட்டும் வில்லனல்ல' என்று சொல்லி ஆதங்கப்பட, கோடம்பாக்கத்தில் ஒரே அனல்! என்ன இப்படி பேசிட்டீங்க என்ற கேள்வியுடன் ஜீவனை தொடர்பு கொண்டோம். மூன்றரை வருஷமா என் உழைப்பு முடங்கி கிடக்கு. என் எதிர்காலமும் அந்த பெட்டிக்குள்தான் இருக்கு. ஆனால் அதை திறக்க வேண்டிய தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் எங்கே இருக்காருன்னே தெரியல. நான் போன் செய்தாலும் எடுப்பதில்லை. எஸ்எம்எஸ் அனுப்பினாலும் பதில் அனுப்புவதில்லை. 'வெள்ளித்திரை', 'அபியும் நானும்', 'இனிது இனிது' ஆகிய படங்களோடு ஆரம்பிக்கப்பட்ட படம்தான் இது. அந்த படங்கள் எல்லாம் திரைக்கு வந்துவிட்டது. ஆனால் 'மயிலு' மட்டும் என்ன பாவம் செய்தாளோ தெரியவில்லை. என்ன நடக்கிறது. என்னதான் பிரச்சினை என்பதையாவது என்னிடம் சொல்லலாமே என்றார் கவலையோடு. இயக்குநர்கள் சங்கத்தில் முறையிட்டிருக்கிறாராம். அவர்களும் பிரகாஷ்ராஜை தொடர்பு கொண்டு படத்தை வெளியிடுகிற முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம். நல்லபடியா முடிச்சுக்குடுங்கப்பா....ரொம்ப புண்ணியமா போகும்!

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum