குடாநாட்டின் தனது தனிப்பட்ட இராணுவத்தை நிறுத்தியுள்ளார் கோத்தபாய
Page 1 of 1
குடாநாட்டின் தனது தனிப்பட்ட இராணுவத்தை நிறுத்தியுள்ளார் கோத்தபாய
இலங்கை இராணுவத்தினர் மீது சர்வதேசம் சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிக்கவும், அதேநேரம் பயங்கரவாதத்தைத் தொடரவும், தமிழ் மக்களைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கவும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்�ஷ குடாநாட்டின் தனது தனிப்பட்ட இராணுவத்தினரை நிலைநிறுத்தியுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நெறிதவறிச் செயற்பட்டுவரும் ஒட்டுக்குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக ஒரு தனிப்படையை கோத்தபாய உருவாக்கியுள்ளார் என்று குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய படையின் தலைமைத்துவம் வன்னியில் உள்ள போதிலும் அவர்கள் பிரதானமாக குடாநாட்டிலேயே செயற்பட்டு வருகிறார்கள்.
குழுக்களாக இயங்கிவரும் இப்படையே அண்மையில் குடாநாட்டில் நடந்துவரும் பொது ஆர்ப்பாட்டங்கள், பொது மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுதல் ஆகிய செயற்பாடுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பதோடு, பொது சமூக இயக்கங்களை பயங்கரவாதமயமாக்கியும் வருகிறார்கள். இக்குழுக்களுக்கு குடாநாட்டிலுள்ள இராணுவத்தினரும் பிற ஒட்டுக்குழுக்களும்கூட ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அண்மையில் குடாநாட்டுக்கு விஜயம் செய்த சர்வதேசக் குழுவைச் சந்தித்த வணபித ஜெயக்குமார் அடிகளார் குடாநாட்டின் நிலவரத்தை அவர்களுக்குத் தெளிவு படுத்தியதை அடுத்து, ஊர்காவற்றுறையில் வைத்து வணபிதாமீது இனம்காணாத குழுவொன்று சேறு வாரி அடித்தமை தெரிந்ததே. இச்சம்பவத்துக்கும் கோத்தபாயவின் இராணுவப் பிரிவுக்கும் தொடர்பு உள்ளதெனத் தெரிகிறது.
குடாநாட்டிலுள்ள அனைத்து பொது அமைப்புகளையும் அச்சுறுத்துவதோடு, குடாநாட்டின் நிலமை குறித்து சர்வதேச பிரதிநிதிகளுக்கு உண்மைகளை வெளிப்படுத்தாமல் செய்வதுமே இப்படையின் முக்கிய நோக்கமாக உள்ளது
Similar topics
» தனது துணைவியருடன் இளவரசரின் முதல் பயணம்
» தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து
» தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum