அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

3 இடியட்ஸில் விஜய் விலகல்-விளையாடிய அரசியல்!

Go down

3 இடியட்ஸில் விஜய் விலகல்-விளையாடிய அரசியல்! Empty 3 இடியட்ஸில் விஜய் விலகல்-விளையாடிய அரசியல்!

Post by devid Sat Dec 18, 2010 11:22 am



விஜய்க்கு இது என்ன நேரமோ ? தமிழில் ஷங்கர் ரீமேக் செய்யும் “3 இடியட்ஸ்” படத்தில் விஜய் இல்லை. விஜய்யின் அரசியல் கூட்டணி யாரோடு ? என பரபரப்பு கிளப்பியிருக்கிறது விஜய்யின் சமீபத்திய செய்திகள். “3 இடியட்ஸ்” ரீமேக்கில் விஜய் நீக்கப்பட்டாரா? இல்லை விலகிக் கொண்டாரா? அப்படியானால் அதற்கு என்ன காரணம் என்ன என்பதே கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் டாக்.

தன் “காவலன்” படத்தை திரையிடுவதிலேயே பல சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், இனி வரும் படங்களுக்கு எதிராகவும் சதிகள் நடப்பதாக நினைக்கிறார் விஜய். ஷங்கரின் “3 இடியட்ஸ்” படத்திற்காக இந்தியில் அமீர் கான் ஸ்டைலில் தன் தலை முடியை ஒட்ட வெட்டி இருக்கிறார் விஜய். இப்போது அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் மற்றப் படத்தின் சூட்டிங்கையும் தொடர முடியாமல் அவதிப்படுகிறார்.

சரி, விஜய் “3 இடியட்ஸ்” படத்தில் இருந்து நீக்கப்பட காரணம் என்ன ? விஜய் அதிமுக அணிக்கு சாதகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் மேலிடத்தை அதிர வைத்திருப்பதால், அவர் நடிக்கும் காவலன் படத்திற்கு எதிரான சில விஷயங்களை செய்யவும் தனது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது…

அப்படியே டைரக்டர் ஷங்கர் மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட்டையும் அழைத்து கடிந்து கொண்டதாக கிசுகிசுக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் இருக்கக் கூடாது என்று அவர்கள் நிர்பந்தம் செய்ததால் ஷங்கரின் வேண்டுகோளுக்கு இணங்கிதான் விஜய் விலகிக் கொண்டார் என்றும் பேச்சிருக்கிறது.

ஆனால் விஜய் தரப்போ, “3 இடியட்ஸ்” படத்திற்கு கால்ஷீட் பிரச்சனைகள் இருந்தது, அதனால்தான் ஷங்கர் படத்தில் இருந்து விஜய் விலகிக்கொண்டார் என்று சொல்கிறது. இம்மாதம் 17-ம் தேதி காவலன் யார் தடுத்தாலும் வெளிவரும் என்று சபதமிட்ட படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் அந்த வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

“காவலன்” படத்தின் விளம்பரங்களில் சென்னையில் புக்கிங் செய்யப்பட்ட தியேட்டர்களின் லிஸ்ட்டை மட்டுமே வெளியிட்டிருகிறார்கள். வெளியூர் தியேட்டர்களின் பெயர்கள் எதுவுமே இல்லை. (குறிப்பாக வெளியூர் எடிஷன்களில் இல்லை). அரசியலில் எந்தப் பக்கம் சாயப் போகிறார் விஜய்? விஜய்யின் சினிமா பாதையில் நிகழப்போகிற திருப்பங்கள் என்ன? எனபதே இளைய தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்…

இதில் இன்னொரு சூடான செய்தி என்னவென்றால் தற்போது ஆளும்தரப்புக்கு இணக்கமாக இருக்கும் சூர்யாவிடம் “3 இடியட்ஸ்” படத்திற்காக பேசிவிட்டாராம் ஷங்கர்…!

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum