போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது - அனலை நிதிஸ் ச. குமாரன்
Page 1 of 1

மே 2009-ல் முடிவடைந்த நான்காம் கட்ட ஈழப்போரின்போது கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க்குற்றவியல் சம்பவங்களில் யார் யார் ஈடுபட்டார்கள் என்கிற பெயர் பட்டியல் வெளிவரத் தொடங்கிவிட்டது. அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட படையதிகாரிகள் மற்றும் கட்டளையிட்ட அரச அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலே வெளிவரத் தொடங்கியுள்ளது.
இன்னும் பல படையதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பெயர் விபரங்களும் வெகுவிரைவில் வெளிவரும் என்கின்றனர் தகவலறிந்த வட்டாரங்கள்.
புலிகளுக்கு எதிராக சண்டை செய்வதாக கூறி பல்லாயிரம் பொதுமக்களைக் கொன்றும் மேலும் பல மனிதப் பேரவலங்களுக்கு காரணமான சூத்திரதாரிகளை விசாரணை செய்து, அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்தப்பட வேண்டும் என்கிற வேண்டுகோள் முன்னர் எப்போதும் விட இப்போது அதிகமாகவே வலியுறுத்தப்படுகிறது. பல உலகநாடுகள் சிறிலங்கா அரசை இது சார்பாக அழுத்தங்களை பிரயோகித்து வருகி;றது.
சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டு தமிழ்மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்திவிடப்பட்ட யுத்தத்தின்போது ஏற்பட்ட உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்கிற அழுத்தம் உலகநாடுகள் மற்றும் உலக மனிதவுரிமை அமைப்புக்களாலும் கோரப்படுன்றன. சிறிலங்கா அரசோ இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பதுடன், இறைமையுள்ள நாட்டின் உள்விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்ற வாதத்தை முன்வைக்கிறது. தனது நாட்டுக்குள் இடம்பெற்ற சம்பவங்களை அறியத் தானே விசாரணைக்குழுவையும் நியமிக்கப்போவதாக ஒரு குழுவையும் சிறிலங்கா அரசு நியமித்தது. இக்குழுவும் கண்துடைப்புக்கு பாதிக்கபட்ட மக்களை சந்தித்து குறை நிறைகளை கேட்பதாக பரப்புரைகளையும் செய்கிறது.
சிறிலங்கா நியமித்த விசாரணைக்குழு மீது உலக மனிதவுரிமை மற்றும் தமிழ் மக்கள் கடுகளவேனும் நம்பிக்கை வைக்கவில்லை. சிறிலங்கா அரசு இது போன்று பத்திற்கு மேற்பட்ட குழுக்களை கடந்த காலங்களிலும் நியமித்தது. இறுதியில் இக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் கிழித்தெறியப்பட்டன என்பதே வரலாறு. இதனடிப்படையில்தான், உலகத்தமிழர்கள் மற்றும் உலக மனிதவுரிமை அமைப்புக்கள் பக்கசார்பற்ற சர்வதேச விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். இதற்கிடையே குற்றவாளிகளின் பெயர் விபரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது.
யார் அந்தக் கொலைகாரர்கள்?
கொலைகாரர்கள் யார் யார் என்கிற பட்டியல் தொடர்ந்து நீண்டுகொண்டே போகும். பக்கசார்பற்ற உலக விசாரணைக்குழு அமைக்கப்படுமேயானால் மேலும் பல உண்மைகள் வெளிவரும். கீழே தரப்படும் முக்கிய நபர்கள்தான் முதலாம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கான தண்டனை குறைந்த பட்சம் மரண தண்டனையாகவே இருக்க முடியும். இவர்களுக்கான தண்டனையைப் பெற்றுத்தர வல்லமையுடைய வல்லரசுகள் எந்தளவுக்கு அக்கறை செலுத்தி நீதியை நிலைநாட்ட முன்வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கடந்த வருடம் மே மாதம் 18-ஆம் திகதி மற்றும் அதன் பின்னரும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் உட்பட பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேர்ந்த சம்பவங்களுக்கு காரணமாக இருந்த இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் சம்பவ இடங்களிலிருந்து பின்னர் தலைமறைவாக இருக்கும் ஊடகவியலாளர் வெளியிட்டுள்ளார்.
59-ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்புப்படை றெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரி கேணல் அதுலா கொடிபிலி,
முதலாவது சிறப்புப்படை பற்றாலியன் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா,
இரண்டாவது சிறப்புப்படை பற்றாலியன் கட்டளை அதிகாரி மேஜர் விபுலதிலக இகலகே.
சிறப்புப்படையின் கொல்ஃப் கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்த குணசேகரா,
றோமியோ கொம்பனியைச் சேர்ந்த கப்டன் கவின்டா அபயசேகர,
எக்கோ கொம்பனியைச் சேர்ந்த மேஜர் கோசலா விஜகோன்,
டெல்ரா கொம்பனியைச் சேர்ந்த கப்டன் லசந்தா ரட்னசேகரா.
கோல்ஃப் மற்றும் றோமியோ கொம்பனிகள் முதலாவது சிறப்புப்படை பற்றாலியனின் கீழ் செயற்பட்டிருந்தன. எக்கோ மற்றும் டெல்ரா கொம்பனிகள் இரண்டாவது சிறப்புப்படை பற்றாலியனைச் சேர்ந்தவை.
படையணிகளின் பிரிவுகளின் தர அதிகாரிகள் வருமாறு:
மேஜர் ஜெனரல் பிரசன்னா டீ சில்வா -55ஆவது படையணியின் கட்டளை அதிகாரி,
மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா -58ஆவது படையணியின் கட்டளை அதிகாரி,
மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா - 53ஆவது படையணியின் கட்டளை அதிகாரி,
கேணல் ரவிப்பிரியா -எட்டாவது நடவடிக்கை படையணியின் கட்டளை அதிகாரி,
மேஜர் ஜெனரல் சாகி கலகே –59ஆவது படையணி கட்டளை அதிகாரி மற்றும்
மேஜர் ஜெனரல் சந்திரசிறி - முன்னாள் யாழ் மாவட்ட கட்டளை அதிகாரி.
இவரின் நேரடிக் கட்டளையின்கீழ் பல அப்பாவிப் பொதுமக்கள் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார்கள். இவருக்கும் வெள்ளை வான் கும்பல்களுக்கும் நெருங்கிய உறவுண்டு என்கிறது யாழ் தகவல்கள்.
சிறிலங்காவின் அரச தரப்பில் போரியல் குற்றங்களை புரிந்தவர்களின் தகவல் வருமாறு:
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா, அரச தலைவர் செயலாளர் லலித் வீரதுங்கா, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சா, சிறப்பு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சா, மற்றும் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னா. இதைத்தவிர மேலும் பலர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் தரப்பட்டிருக்கும் நபர்களின் பங்கே முக்கியமானது. கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டனை கொடுக்கப்படுமேயானால், இவர்கள் அனைவரும் முதலாதவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டியவர்கள்.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டார்கள்! பல நூறு சாட்சியங்கள் தயாராக இருக்கிறது!! எப்ப விசாரணை ஆரம்பம்?
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டாலும், சாட்சியங்கள் திரட்டப்பட்டுவிட்டாலும் யார்தான் விசாரணையை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் இப்போ எழும் கேள்வி. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவ நாடாக இருக்கும் சிறிலங்கா மீது ஐநாவின் பொதுச் செயலாளர் அளவு கடந்த கரிசனையை வைத்துள்ளார். தண்டனையைப் பெற்றுத்தரவேண்டிய பொறுப்பிலிருக்கும் ஒருவர் அதீத பாசத்தை சிறிலங்கா அரச தலைவர்கள் மீது வைத்திருக்கும்போது எப்படி விசாரணைக்குழுவை நியமித்து விசாரிப்பார் என்பதுதான் அனைவரது மனங்களிலும் எழும் கேள்வி. இப்படியாக பல கேள்விகள் எழும்வேளையில் சிறிலங்காவுக்கு எதிராக பல முனையிலிருந்து கண்டனக்குரல்கள் வந்தவண்ணமும் உள்ளன. மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் உலகச் செய்தி நிறுவனங்கள் தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியில் இரு வாரங்களுக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட ஐந்து நிமிட காணொளியைக் கொண்டு சர்வதேச மட்டத்தில் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென மனிதவுரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சென்ற வருடம் ஒளிபரப்பப்பட்ட காணொளியின் நீட்டிப்பு காணொளி என குறிப்பிட்ட காணொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அக்காணொளியில் உள்ள ஒரு பெண்ணின் உடல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக்காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்டவல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் இவ்வாறான காணொளிச் சாட்சிகளை சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், கடந்த பல மாதங்களிற்கு முன்னர் தாம் வெளியிட்ட இளைஞர்கள் வரிசையாகச் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்ரன் ஆய்வு செய்து, அது உண்மையான காணொளி எனக் கூறியிருந்ததையும் இந்தத் தொலைக்காட்சி நினைவூட்டுவதுடன், ஏனைய பல சட்ட மற்றும் போர்க்குற்ற வல்லுனர்களின் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.
புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமேஷ் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் வெள்ளைக்கொடியை ஏந்திச் சென்ற போது இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததாக முன்பு செய்திகள் வெளிவந்திருந்தது. ஆனால் பிரித்தானியாவின் ரெலிகிராப் மற்றும் இன்டிபென்டன் ஆகிய பத்திரிகைகள் ரமேஷ் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது அவர்களால் விசாரிக்கப்படும் காணொளியை வெளியிட்டுள்ளது. இந்தக் காணொளி தற்போது வெளிவந்துள்ளமையால் இராணுவத்தடுப்புக் காவலிலேயே ரமேஷ் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சிறிலங்காவின் முக்கிய அமைச்சர் கடந்த மாதம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ரமேஷ் உட்பட முன்னணி விடுதலைப்புலித் தளபதிகள் எவரையும் தாம் கைது செய்யவில்லையெனவும், அப்படி யாரையும் தாம் கொல்லவில்லையெனவும் சோற்றில் முழுப் பூசனிக்காயையே மூடிமறைக்கப்பார்த்தார். சிறிலங்கா அரசின் போலித்தனமான கொடூர முகத்தை சர்வதேச அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது வெளிவந்துள்ள தகவல்கள்.
சிறிலங்காவின் ஜனாதிபதி பிரிட்டனில் தங்கியிருந்தவேளையில் சனல்-4 தொலைக்காட்சி இன்னும் சில காணொளிக் காட்சிகளை ஒளிபரப்பியது. சிறிலங்கா இராணுவத்தின் 53-ஆவது படையணியினரிடம் சரணடைந்த ஊடகவியலாளர் சோபா (27) எனப்படும் இசைப்பிரியா, போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் எந்தவித ஆயுதப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளாத இசைப்பிரியா தன்னை முழுமையாக ஊடகப்பணிகளில் ஈடுபடுத்தியிருந்தார். வன்னியில் இடம்பெற்ற போரில் மக்கள் அடைந்த துன்பங்களை அனைத்துலக ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணிகளையே அவர் முதன்மைப்படுத்தியிருந்தார். இசைப்பிரியா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பின் கொலைசெய்யப்படும் காட்சியை சனல்-4 ஒளிபரப்பியது. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற படையினரின் தாக்தலில் சிக்கி இசைப்பிரியாவின் ஆறு மாதக் குழந்தையும் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் உசாளினி என்கிற 19 அகவையுடைய அகல்விழியும் இராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரைவதைகளுக்கு பின்னர் கொலை செய்யப்படும் காட்சியையும் சனல்-4 ஒளிபரப்பியது. யாழ்ப்பாணம் பண்டைத்தரிப்பைச் சேர்ந்த உசாந்தினி என்கிற 19 வயதான மதுநிலா என்கிற பெண்ணும் சித்திரைவதைக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்ட காட்சியையும் சனல்-4 ஒளிபரப்பி சிறிலங்கா அரசின் மீது சர்வதேச விசாரணை தேவை என்பதைக் கோரியது. இப்படியாக பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்றும் லட்சக்கணக்கானவர்கள் நடைப்பிணங்களாக அலைந்து திரிகிறார்கள. சிறிலங்கா அரசோ தான் அப்படி யாரையும் கொல்லவில்லையெனவும் புலிகள்தான் அக்கொலைகளை செய்தார்கள் என்று அப்பட்டமான பொய்ப்பரப்புரையை செய்து வருகிறது.
சிறிலங்கா அரசின் பொய்யான பரப்புரைகள் அனைத்துலக மட்டத்திலும் தோல்வியை கண்டுவரும் இந்நேரத்தில், சர்வதேச விசாரணைக்கான தேவையை பன்மடங்காக்கியுள்ளது. குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் வெளிவந்திருக்கும் இவ்வேளையில், உலக ஊடகங்களினூடாக வெளிவரும் காணொளிக்காட்சிகள் குறிப்பாக பிரிட்டனின் பல முக்கிய ஊடகங்கள் உட்பட வாஷிங்டன் டைம்ஸ் மற்றும் கனடாவின் நியூஸ் வயர் போன்ற பிரபல்யமான ஊடகங்களினூடாக வெளிவரும் உண்மைகளே போதும் பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நபர்களுக்கு மரண தண்டனை பெற்றுத்தர.
உலகத்தமிழரின் தொடர் போராட்டங்களினாலும் உலகநாடுகளின் வற்புறுத்தலினாலுமே தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும். ஐநாவின் பொதுச் செயலாளரின் இருண்ட மனக்கதவை திறக்கவைத்து, ஐநாவே நேரடியாக தலையிட்டு பக்கசார்பற்ற விசாரணையை மேற்கொண்டு தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரினதும் பிரார்த்தனை.

MayA- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum