ஈழத்தமிழர்களுக்கு உதவியதற்காய் கைது செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழக முக்கியஸ்தர்கள் விடுதலை
Page 1 of 1

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கீழ் புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், தி.மு.க. கவுன்சிலரும் மீனவர் சங்கத் தலைவருமான சக்திவேல் ஆகிய இருவரும் நேற்றிரவு சிறையிலிருந்து விடுதலையானார்கள்.
ஈழத் தமிழ் உறவுகள் வெளிநாடு செல்ல உதவினார்கள் என்பதற்காக அவர்கள் இருவரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இதே குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இந்திய தண்டனை சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு வாரம் சிறைவாசத்துக்குப் பிறகு, நீதிமன்றத்தால் நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
அவ்வாறான நிலையில் மத்திய அமைச்சர் ஒருவரின் தூண்டுதல் காரணமாக அவர்கள் இருவரும் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை எதிர்த்து புதுவை வாழ் தமிழின உணர்வாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். அதன்போதும் சுமார் 302 பேர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக, லோகு அய்யப்பன் சார்பாக, அவரது தந்தை லோகநாதனும், சக்திவேல் சார்பாக அவரது மனைவியும் மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இக் கடிதத்தை பரிசீலனை செய்த உள்துறை 13-12-2010 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச்செய்து விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆயினும் அவர்கள் இருவரும் மேலதிகமாக இரண்டு நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். .

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை
» தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை
» ஏப்ரல் 29 , மே 1 , மே 18 தமிழீழ மக்கள் சனநாயக ரீதியிலான, விடுதலை போருக்கு தயாராகும் நேரமிது
» தமிழ் மக்கள் விடுதலை முன்னணி கட்சி அரசாங்கத்திடம் சில யோசனைத் திட்டங்கள் முன்வைப்பு
» தமிழக மீனவர்கள் 136 பேரும் இன்று விடுதலை! வடபகுதி மீனவர்கள் அதிருப்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum