தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை
Page 1 of 1

புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வருடக்கணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்கும்படி நாம் இலங்கையர் அமைப்பு நேற்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக நாம் இலங்கையர் அமைப்பு நேற்று மருதானையில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ன மேலும் கூறியவை வருமாறு:
மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 120 புலிச்சந்தேக நபர்களில் 15 பேருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. அதே போன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 55 புலிச் சந்தேகநபர்களில் 9 பேருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை.
இந்த அப்பாவிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் சுமார் 400 தடவைகள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த மகேந்திரம் என்பவர் 18 வருடங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எதுவிதக் குற்றமும் இழைக்காத மகேந்திரன் 18 வருடங்களாகச் சிறையில் உள்ளார்.
ஆயுதம் ஏந்திய குற்றத்துக்காக 18 வருடங்களாக சிறையில் உள்ள மகேந்திரனைப் போன்று பலர் இன்னும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களை விடுவிப்பதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Similar topics
» ஜயலத் ஜயவர்த்தன மற்றும் விக்கிரமபாகு கருணாரத்தின மீது பொலிசில் முறைப்பாடு: கைது செய்யுமாறு கோரிக்கை
» தடுப்புக் காவலிலுள்ளோரின் விபரங்களைப் பார்வையிடச் சென்ற பெற்றோருக்கு ஏமாற்றம்
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை
» ஈழத்தமிழர்களுக்கு உதவியதற்காய் கைது செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழக முக்கியஸ்தர்கள் விடுதலை
» ஈழத்துரோகிகளை அடையாளம் காணவேண்டும் - வைகோ கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum