ஐ.நா.நிபுணர் குழு பொன்சேகாவை சந்திக்க அரசு அனுமதி வழங்குமா? - ஐ.தே.க.கேள்வி
Page 1 of 1

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கும் ஐ.நா. நிபுணர் குழுவானது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு அரசாங்கம் அனுமதியளிக்குமா? என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. நேற்று திங்கட்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டிற்கோ, பாதுகாப்பு படையினருக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத விதத்தில்எந்தவொரு சர்வதேசக் குழுவுக்கும் பதிலளிப்பதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத்தளபதி தெரிவித்திருந்த நிலையில் இந்த விடயம் குறித்து தெளிவான தீர்மானத்தை அரசாங்கம் வெளியிட வேண்டுமென கண்டி மாவட்ட ஐ.தே.க.எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வலியுறுத்தினார்.
லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.தொடர்ந்தும் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவுக்கு இங்கு வரவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பது தொடர்பிலும் அரச தரப்பினரால் பேசப்படுகின்றது.
இந்த நிபுணர் குழு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் கலந்துரையாடவா அல்லது சாட்சியமளிப்பதற்காகவா என்பது தொடர்பில் தெளிவாக கூறப்படவில்லை.
முன்னர் ஐ.நா.நிபுணர் குழுவை அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸும், விமல் வீரவன்ஸவும் எதிர்த்த நிலையில் ஐ.நா.வின் இலங்கையிலுள்ள அலுவலகம் முன்பாகவும் போராட்டமும் இடம்பெற்றது.
இவ்விடயம் தொடர்பில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு கருத்தினை அரசு தெரிவிக்கின்றது. அரசு வெளிநாட்டில் ஒன்றும் உள்நாட்டில் ஒன்றும் கூறுவது வெளிப்பட்டுள்ளது.
யுத்தம் தொடர்பில் சரத் பொன்சேகா நன்கு அறிந்தவர் ஐ.நா.நிபுணர் குழு இறுதி யுத்தம் குறித்து ஆராயுமாயின் சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு இடமளிக்குமா?
சரத் பொன்சேகா நாட்டுக்கும் இராணுவத்துக்கும் களங்கத்தை ஏற்படாத வகையில் தேவையானவற்றை கூறுவேன் என தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரை நிபுணர் குழு சந்திக்க இடமளிக்குமா? இவ்வாறு லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Similar topics
» ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்துவதற்கு அல்ல! சாட்சியமளிக்கவே ஐ.நா.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் – அரசாங்கம் நிபந்தனையுடன் அனுமதி
» இந்திய சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்க முனைந்த கோத்தாபயவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு
» நிபுணர் குழுவுக்கு எதிராக உண்ணாவிரதம் ஆரம்பிக்கவில்லையா?: விமல் வீரவங்சவிடம் ஜனாதிபதி கிண்டலாகக் கேள்வி
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum