நிபுணர் குழுவுக்கு எதிராக உண்ணாவிரதம் ஆரம்பிக்கவில்லையா?: விமல் வீரவங்சவிடம் ஜனாதிபதி கிண்டலாகக் கேள்வி
Page 1 of 1

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக உண்ணாவிரதமொன்றை ஆரம்பிக்கவில்லையா என்று அமைச்சர் விமல் வீரவங்சவிடம் ஜனாதிபதி கிண்டலாக வினாத் தொடுத்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் செயற்குழுக்கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. அதில் பிரதம பேச்சாளராக கட்சியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச உரையாற்றியுள்ளார்.
அதன் போது ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை தருஸ்மான் குழு அறிக்கையாக அடையாளப்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசாங்கத்தின் பங்காளிகள் என்ற வகையில் எங்களைக் கேட்காமல் அரசாங்கம் எந்த முடிவையும் எடுப்பது தவறு என்ற வகையில் அவர் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
அமைச்சரின் உரை முடிவுற்றவுடன் அவரது செல்லிடத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. மறுபுறத்தில் ஜனாதிபதி கடும் கோபத்துடன் கத்திப் பேசியுள்ளார். நீ எப்படி எங்கள் முடிவுகளை விமர்சனம் செய்யலாம் என்ற கேள்வியே ஜனாதிபதியின் ஏச்சின் சாராம்சமாக இருந்துள்ளது.
தான் பேசி முடிப்பதற்குள்ளேயே ஜனாதிபதிக்கு எப்படி செய்தி போனது என்ற திகைப்பில் அமைச்சர் விமல் வீரவங்ச வாயடைத்துப் போன காரணத்தினால் பதிலே பேசவில்லையாம்.
கடைசியாக தொலைபேசி அழைப்பைத் துண்டிக்கும் போது, "என்னப்பா, நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இம்முறை உண்ணாவிரதம் ஏதும் இருக்கவில்லையா?" என்று ஜனாதிபதி அமைச்சர் விமல் வீரவங்சவிடம் கிண்டலாக கேள்வியொன்றையும் தொடுத்துள்ளார். அமைச்சர் முகத்தில் ஈயாடவில்லையாம்.

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» ஐ.நா. வின் நிபுணர் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் விமல் வீரவன்ச
» ஐ.நா.நிபுணர் குழு பொன்சேகாவை சந்திக்க அரசு அனுமதி வழங்குமா? - ஐ.தே.க.கேள்வி
» ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!
» பண்டாரநாயக்கவின் சிலை வேறிடத்திற்கு மாற்றப்படமாட்டாது - ஜனாதிபதி அலுவலகம்
» என் மீது போர்க்குற்றமா? - மேதினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum