த. தே கூட்டமைப்புடனேயே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். - த.தே.ம முன்னணி
Page 1 of 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். - தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தை நோக்கிச் செல்லாது வேறு திசையில் செல்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இந்த முன்னணி இதனைத் தெரிவித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின்போது தமிழ்த் தேசியத்தைப் பற்றியும் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியத்தைக் கைவிட்டு வேறொரு திசையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
மேலும் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதோ அல்லது அறிக்கை சமர்ப்பிப்பதோ முறையற்றதொன்றாகவே இருக்கும். இவ்வாறான நிலமை உருவாகுமானால் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன அழிப்பு மூடிமறைக்கும் செயலாகும்.
இதனால்தான் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியமழிப்பதில்லயென தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட இன அழிப்பின் உச்சக்கட்டமாக 2009 மே மாதம் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆயத போராட்டத்தை அழித்துள்ளது. இந்த இன அழிப்பின் மூலம் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின்மீது போர்க் குற்றம் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்கு வலியுறுத்தி வருகிறது. இதனை மூடி மறைப்பதற்காகவும் இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஜனாதிபதியினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கையின்மீது திரும்பியுள்ள நேரத்தில் போர்க் குற்றங்களை மட்டும் அரசியல் கட்சிகளோ தமிழ் தலைமைகளோ புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்பினர்களோ எ:த்துக்காட்டாது இலங்கை அரசாங்கத்தால் கடந்த 60 வருடங்களாக திட்டமிட்ட இன அழிப்பு நடைபெற்றது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்ட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பதுடன் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக இந்த முன்னணி தெரிவித்துள்ளது.
இச் சந்திப்பில் கயேந்திரகுமார் பொன்னம்பலம் கயேந்திரன் திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் முன்னாள் வேட்பாளர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

Similar topics
» தமிழ் கூட்டமைப்புடனான 3ம் சுற்று பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது! - காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சி! நடைபெறும் என்கிறார் மாவை எம்.பி.
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி _
» தமிழ் மக்கள் விடுதலை முன்னணி கட்சி அரசாங்கத்திடம் சில யோசனைத் திட்டங்கள் முன்வைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum