இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
Page 1 of 1

எந்த நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு எதிராக செயற்பட போவதில்லை என, அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.
தமிழகம் கீழைக்கரையில் இடம்பெற்ற மேல் மாகாண ஆளுனர் சியாட் அலவி மௌலானாவின் உறவினர் ஒருவரது திருமண நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான தமிழ் பிரதேச அபிவிருத்திக்கு இந்தியாவின் பங்களிப்பை இலங்கை அரசாங்கம் அதிகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஆகியோருக்கு இடையில் சிறந்த உறவு ஒன்று காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் தமிழர்கள் அபிவிருத்தி கண்டு, பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா, இலங்கை அரசாங்கமும், தமிழ் மக்களும் கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் எனவும், இனி எதிர்காலத்தில் நடைபெற வேண்டியவை குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» பலாலியும் காங்கேசன்துறையும் இந்தியாவுக்கு: இலங்கை அரசாங்கம் இணக்கம்
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» விடுதலைப்புலிகள் இல்லாவிட்டாலும் அச்சுறுத்தல் தணியவில்லை - இலங்கை அரசாங்கம்
» ஹில்டன் ஹோட்டலை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum