வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கும்படி பாஜக தலைவர்கள் வலியுறுத்தல்
Page 1 of 1

முன்னாள் பிரதமரும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாய்க்கு நேற்று 86 வயது முடிந்து 87-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
பா.ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜஸ்வந்த் சிங் உள்பட பலர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
வாஜ்பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விட்டு திரும்பிய ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாஜ்பாய் இந்த நாட்டுக்கு எண்ணற்ற சேவைகள் செய்துள்ளார். பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு அவர் ஆற்றிய சேவைகளை இந்த நாடு ஒரு நாளும் மறக்க முடியாது. ஆகவே, அவரது அளப்பரிய சேவைகளை பாராட்டி, அவருக்கு `பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று மத்திய அரசை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய அரசியலின் மதிப்பு, மரியாதை குறைந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த மரியாதையை உயர்த்த உறுதி பூண்டு, கடந்த 55 ஆண்டுகளாக அதற்காக உழைத்த தலைவர் வாஜ்பாய்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், ``வாஜ்பாய் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த, ஒப்பற்ற தலைவர். சிறந்த பொக்கிஷம். ஆசியாவிலேயே மிக உயர்ந்த தலைவர். ஆகவே அவருக்கு `பாரத ரத்னா' விருது வழங்கியே தீரவேண்டும். இன்றைக்கு `பாரத ரத்னா' விருதுக்கு அவரை விட சிறந்த தலைவர் யாரும் இல்லை. ஆகவே கட்சி வேறுபாடு இன்றி, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் மத்திய அரசுக்கு குரல் எழுப்ப வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ஜஸ்வந்த் சிங் கூறுகையில், ``வாஜ்பாய் தலைமையிலான மந்திரி சபையில் எனக்கு மந்திரி பதவி கொடுத்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். அவருடன் பணியாற்றியது என் மாபெரும் பாக்கியம். அதற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்'' என்று சொன்னார்.

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை
» பாஜக தலைவர் சின்காவிடம் ராடியா பேச்சு எடுபடவில்லை
» இலங்கை விவகாரத்தை சிக்கலாக்காதீர்! சர்வதேச சமூகத்திடம் சீனா வலியுறுத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum