அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

என் மகனை என்னிடம் ஒப்படையுங்கள்: சென்னை விமான நிலையத்தில் விஜயகுமாருடன் நடிகை வனிதா தகராறு ; இருவரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

Go down

என் மகனை என்னிடம் ஒப்படையுங்கள்: சென்னை விமான நிலையத்தில் விஜயகுமாருடன் நடிகை வனிதா தகராறு ; இருவரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் Empty என் மகனை என்னிடம் ஒப்படையுங்கள்: சென்னை விமான நிலையத்தில் விஜயகுமாருடன் நடிகை வனிதா தகராறு ; இருவரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

Post by Admin Wed Dec 29, 2010 7:11 am

நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா. வனிதாவுக்கும், அவரது முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. அவனை தன்னிடம் ஒப்படைக்க கோரி வனிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 2 வாரத்திற்குள் நடிகை வனிதாவிடம் ஸ்ரீஹரியை ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 23-ந் தேதி ஆகாஷுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், நடிகர் விஜயகுமார் தனது பேரன் ஸ்ரீஹரியுடன் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 10.15 மணிக்கு சென்னை வந்தார்.

இதுபற்றிய தகவல் ஏற்கனவே தெரிந்ததால், நடிகை வனிதா தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் விமான நிலையத்துக்கு சென்றார். விமான நிலைய கட்டிடத்திற்குள் இருந்து விஜயகுமார் பேரன் ஸ்ரீஹரியுடன் வெளியே வந்த போது, நடிகை வனிதா விரைந்து சென்று, ஸ்ரீஹரியை அவரிடம் இருந்து பறிக்க முயன்றார். எனது மகன் ஸ்ரீஹரி என்னுடன்தான் இருக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

எனவே அவனை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அவனைப்பிடித்து இழுத்தார். ஆனால் விஜயகுமார் ஸ்ரீஹரியை விட மறுத்தார். இதனால் அவருடன் வனிதா தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற பயணிகள் என்ன தகராறு என்று ஆர்வத்துடன் பார்த்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் டிக்பால், அவர்களிடம் சென்று இங்கு தகராறு செய்யக்கூடாது. எதுவாக இருந்தாலும் போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறி விஜயகுமாரையும், வனிதாவையும் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» லண்டனிலிருந்து நாடு திரும்பிய விக்கிரமபாகு கருணாரத்தின மீது விமான நிலையத்தில் தாக்குதல்: ஊடகவியலாளர்களுக்கும் காயம்
» அமைச்சர் டக்ளஸை கைது செய்யக் கோரிய மனு: விசாரணைக்கு ஏற்றது சென்னை
»  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு
» மட். புகையிரத நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிப்பு கவனமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum