அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கேரளப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது

Go down

கேரளப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது Empty கேரளப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது

Post by theepan Wed Feb 16, 2011 5:57 am

கேரள மாநிலத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதால், அங்கு ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்ப்பது குறைந்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதே மக்கள் தொகை குறையக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் ஆரம்ப பள்ளிகளில் சேர்வதற்குள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

சட்டப் பேரவையில் சமர்ப்பித்த மாநில திட்டக்குழுவின் பொருளாதார ஆய்வறிக்கை இந்த தகவலைத் தெரிவிக்கிறது.

2010-2011-ம் ஆண்டு பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 43.51 லட்சம். ஆனால் 2009-2010-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 44.58 லட்சமாக இருந்தது.

அதற்கு முந்தைய 2008-2009 ஆண்டில் இது 45.46லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் மொத்தம் 12,642 பள்ளிகள் உள்ளன.இவற்றில் 4,501 அரசு நடத்துவது.

7,278 பள்ளிகளுக்கு அரசு உதவித் தொகை அளித்து வருகிறது. 863 பள்ளிகள் தனியார் நடத்துபவை. ஆசிரியர்-மாணவர் விகிதம் மிகவும் மோசமாக உள்ளதால், 3,962 பள்ளிகள் நடத்துதில் சிரமம் உள்ளது.

பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகக் குறைவாக இருந்தும், 2,918 ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதால் வீண் செலவு தொடர்கிறது. மொத்த மாணவர் எண்ணிக்கையில் 49.27 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பள்ளியில் சேரும் மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதில்லை. பள்ளிப்படிப்பைவிடுபவர் எண்ணிக்கை வெறும் 0.66 சதவீதம்தான்.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum