கனடிய அரசின் தகவல்கள் திருட்டு
Page 1 of 1
கனடிய அரசின் தகவல்கள் திருட்டு
கனடிய அரசு மீது அயல்நாட்டு நபர்கள் எதிர்பாராத தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கனடிய அரசின் முக்கிய தகவல்களை இணையத்தில் திருடுவதற்காக அந்த நபர்கள் சீனாவில் இருந்து முயற்சித்துள்ளனர். இணையதள தகவல் திருடர்களால் கனடிய அரசின் இரு முக்கிய துறைகளின் இணையங்கள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சீன கம்ப்யூட்டர் சர்வர்கள் மூலம் தகவல்களை திருட முயற்சி நடந்துள்ளது. இந்த வேலையில் ஈடுபட்டவர்கள் சீனநாட்டை சேர்ந்தவரா அல்லது அயல் நாட்டவரா என்பது தெரியவில்லை. பாதுகாப்பு மீறல் குறித்து பிரதமர் ஹார்ப்பர் அரசின் அதிகாரிகள் மௌனம் சாதித்து வருகிறார்கள்.
இணைய தகவல் திருடர்கள் குடியரசின் நிதித்துறை மற்றும் கருவூல அமைப்பின் கம்ப்யூட்டர் முறையில் ஊடுருவி உள்ளனர். மூத்த அரசு அதிகாரிகளின் கம்ப்யூட்டர்களை தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டுவர இணைய திருடர்கள் முயன்றிருக்கிறார்கள்.
அரசின் முழு புள்ளி விவரங்களை தெரிந்து கொள்வதற்காக முக்கிய கடவுச்சொல்லை திருடுவதற்காக நடவடிக்கையில் இறங்கியது தெரியவந்தது. இந்த தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டதும் அரசு அதிகாரிகள் நிதி மற்றும் கருவூல அமைப்பின் பயன்பாடு சேவையை நிறுத்தினர். இணையத்தின் மூலமாக தகவல்கள் திருடப்படும் நடவடிக்கையை முறியடிக்க அதிகாரிகள் இம்முடிவை எடுத்தனர்.
அரசின் இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இணைய சேவையை பயன்படுத்த முடியவில்லை. அரசின் இணையதள சேவை பாதுகாப்பின்றி உள்ளது என குடியரசின் நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» சிங்கள அரசின் தமிழினவழிப்புக்கெதிரான அனைத்துலக மக்களவைகளின் போராட்டம்
» சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு சிக்கும் அபாயம்! மக்களே விழித்தெழுவீர்!!
» சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum