அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிங்கள அரசின் தமிழினவழிப்புக்கெதிரான அனைத்துலக மக்களவைகளின் போராட்டம்

Go down

சிங்கள அரசின் தமிழினவழிப்புக்கெதிரான அனைத்துலக மக்களவைகளின் போராட்டம்  Empty சிங்கள அரசின் தமிழினவழிப்புக்கெதிரான அனைத்துலக மக்களவைகளின் போராட்டம்

Post by VeNgAi Sun May 01, 2011 7:49 pm

ஈழத்தீவு சுதந்திரம் பெற்றுக்கொண்ட நாள் முதல் இன்று வரை தொடருகின்ற தமிழினவழிப்பில் கடந்த 2009 இல் நடைபெற்ற தமிழினப் படுகொலை என்பது தமிழ் மக்களை குறிப்பிட்ட ஒரு வலயத்திற்குள் வரவைத்து தமிழர்களின் பாதுகாவலர்களாக, பிரதிநிதிகளாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரில்,
போரியல் விதிகளை மீறி பாதுகாப்பு வலயம் மீதும் மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள், நிவாரணம் வழங்கும் பொது இடங்கள் போன்றவற்றை இலக்கு வைத்து சிறீலங்கா அரசு விமானக் குண்டு வீச்சு, எறிகணை வீச்சு, கொத்துக் குண்டு, நச்சு வாயு, மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தி பல்லாயிரக்கணக்கில் அப்பாவிப் பொதுமக்களை ஆண், பெண், சிறுவர்கள், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி மிகக் கொடூரமாகத் தமிழ் மக்களை கொன்று குவித்ததுள்ளது.

சிங்கள அரசினது இனவெறியின் உச்சக்கட்டம் தான் முள்ளிவாய்க்காலில் 146679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

சிறீலங்கா பேரினவாத அரசு மே 2009 இல் தமிழின அழிப்பை நடாத்தி ஓராண்டாகியிருந்த பின்னும் அனைத்துலகம் போர் குற்றங்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுத்திருக்காத நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலையை உலகறியச் செய்யவும், அப்படுகொலையில் அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரவும்
என மே 18ம் நாளை போர் குற்றவியல் நாள் ( WAR CRIMES DAY) என ஈழத்தமிழ் மக்கள் பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.

குறிப்பாக போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவை வெளிக்கொண்டுவந்துள்ள இவ்வேளையில் ஏப்பிரல், மே மாதங்களை தமிழினப்படுகொலையை
நினைவுகூர்ந்து வெளிப்படுத்தும் மாதங்களாகவும், மே 18ம் நாளை போர்க்குற்றவியல் நாளாக உணர்வு பூர்வமான முறையில் நினைவு கூர்ந்து, வாழிட நாட்டு அரசுகளுடனானதும் அரச
பிரமுகர்களுடனானதுமான தொடர்புகளைப் வலுப்படுத்தி, வெளிநிகழ்வுகள் மூலம் போர்க்குற்ற விசாரணை என்னும் நடவடிக்கைகளை அனைத்துலகம் முன்னெடுக்க ஊக்குவிப்பதற்கும்
அவ்வாறு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மூலம் தமிழினப் படுகொலையை உலகறியச் செய்து தமிழினத்திற்கான நியாயமான தீர்வாக அமையக்கூடிய தமிழீழத்தை அனைத்துலகம்
அங்கீகரிக்கக் கோரியும் தமிழ்மக்கள் இந்நாளை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென்பதை காலம் உணர்த்தி நிற்கின்றது.

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனித்துப் போன நாள் முதல், தாயகத்தில் வாழுகின்ற உறவுகளின் குரல் முற்றுமுழுதாக நசுக்கப்பட்டிருக்கின்ற சூழலில் புலம்பெயர்மக்கள்,
தமிழினப் படுகொலையை நினைவு கூருகின்ற ஏப்ரல்-மே மாதங்களிலும் போர்க்குற்றவியல் நாளை முன்னிட்டும் பல்வேறுபட்ட கவனயீரப்பு, ஊர்வலங்கள், ஒன்றுகூடல்கள், உண்ணா நோன்பு, மிதிவண்டிப் பயணம், பத்திரிகையாளர்கள் மாநாடு, கண்காட்சிகள், கருத்தரங்குகள் போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த வகையில் மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோமீற்றர்கள்" என்ற தலைப்பில் டென்மார்க் நாட்டிலிருந்து செருமனியூடாக நெதர்லாந்து நாட்டில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தை நோக்கி தமிழினவழிப்புத் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரக் கோரி மிதிவண்டிப் பயண கவனயீரப்புப் போராட்டத்தை தொடங்கவுள்ளார்கள்.

மே 18ஆம் நாள் நெதர்லாந்து நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்து, அவ்விடத்திலே நீதிகோரி உரிமைப் போராட்டத்தை நடாத்துவதோடு, அனைத்துலக ரீதியாக சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுடன்
மனுவும் கையளிக்கப்படவுள்ளது என்பதை அனைத்துலக மக்களவைகள் அறியத்தருகின்றனர்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum