யாழ்.மீனவ சங்கப் பிரதிநிதிகள்-அரசாங்க அதிபருடன் சந்திப்பு! தமிழக மீனவர்களினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்டஈடு கோரினர்
Page 1 of 1

இலங்கையின் வடபகுதிக் கடலில் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களிடமிருந்து தமக்குத் தொழில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வடமாகாண மீனவர்கள் யாழ்.அரசாங்க அதிபரிடம் கோரியுள்ளனர்.
அத்துடன், இந்திய மீனவர்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்பிற்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் பருத்தித்துறை மீனவர்கள் யாழ் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்த பருத்தித்துறை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இந்திய மீனவர்களின் வருகையினால் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரச அதிபருடன் கலந்துரையாடியுள்ளனர்.
அதேவேளை, இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் உள்ளுர் மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தியிருப்பதனால் பல மீனவர்கள் பெரும் நடத்திற்கு உள்ளாகி, தொழில் செய்யமுடியாத நிலைமைக்கு ஆளாகியிருப்பதாக பருத்தித்துறை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் யாழ். அரச அதிபரிடம் சுட்டிக்காட்டினர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பதிலளித்துள்ளார்.
உள்ளுர் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்த யாழ் அரச அதிபர், தற்போதைய நிலைமை குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கூறினார்.
பருத்தித்துறை முனை முதல் நெடுந்தீவு வரையான கடற்பிரதேசத்தில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு நடத்துவேன். யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கடற்தொழில் சங்கப் பிரநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் மீனவ சங்கப் பிரதிநிகள் தெரிவித்தவை வருமாறு:
உயர்பாதுகாப்பு வலய பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டிருந்த கடற்பிரதேசங்களில் சில பகுதிகளில் தற்போது தான் மீன் பிடி நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம். இந்தச் சூழ் நிலையில் எமது மீன்பிடி வலைகளை இந்திய மீனவர்கள் அத்து மீறி உள்நுழைந்து அறுத்துச் செல்கின்றனர். அவர்கள் மேலும் தம்மை அச்சுறுத்தியும் வருகின்றனர்.
இந்தச் செயற்பாடுகள் தொடடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இலங்கையில் தடைசெய்யப்பட்ட றோலர் மற்றும் வலைகளைக் கொண்டுதான் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் புகுந்து மீன் பிடிக்கின்றனர்.
சில வேளைகளில் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களுக்கு சட்டவிரோதமாக உள் நுழையும் இந்திய மீனவர்கள் போதைவஸ்த்துக்களையும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
எனவே இவற்றைத் தடுக்கும்பொருட்டு பருத்தித்துறை முனை முதல் நெடுந்தீவு வரையிலான பிரதேசத்தில் கடற்படையினர் தினமும் ஆகக் குறைந்தது 10 தடவைகளாவது கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த கட்டளைத் தளபதி இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar topics
» யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 108 பேர் கைது
» குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களினால் சிறைப்பிடிப்பு
» ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு
» அரசாங்கம் - தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்! இரு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு
» வெளிச்சத்துக்கு வராத ஐ.நா. செயலர் - இலங்கை அதிகாரிகள் சந்திப்பு இரகசியங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum