ஈழத்தாயின் மறைவுக்கு திருமாவின் துயர்பகிர்வு
Page 1 of 1

ஈழத்தாய் பார்வதியம்மாவின் பிரிவுச்செய்தியறிந்து தொல் திருமாவளவன் துயர்பகிர்வு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், ஈழத்தாயாரின் இறுதிக்கிரியைகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் திருமிகு பார்வதி அம்மாள், வல்வெட்டித்துறை பொது மருத்துவமனையில் நீண்டகாலமாக உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (20-02-2011) அதிகாலையில் காலமாகிவிட்டார்.
அவருடைய இறப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உலகத் தமிழர்களை தலைநிமிர வைத்த தமிழீழத் தேசியப் புரட்சியாளர் மேதகு பிரபாகரன் அவர்களை ஈன்ற மகத்தான பெருமைக்குரிய அன்னை பார்வதி அம்மாளின் இறப்பு உலகத் தமிழர்களுக்கு தாங்கவொண்ணாத் துக்கத்தை அளிப்பதாகும். பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து உற்ற துணைவரை இழந்து தாளமுடியாத துக்கத்தில் விழுந்து தனிமையில் வாடிய தாய் பார்வதி அம்மாள் பத்துகோடித் தமிழர்களுக்கும் தாய் என்னும் பெருமையைப் பெற்றிருந்தாலும் அவர்களின் கடைசிப் பொழுதுகளில் உடனிருக்க ஒருவருமே இல்லை எனும் அவலத்திற்கு ஆளான நிலையை எண்ணி விம்முவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை.
அவரது இழப்பு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே பேரிழப்பாகும். அவரது இழப்பால் உள்ளம் வருந்தும் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி ஆறுதல் தேடும் நிலையே உள்ளது.
அந்த வகையில் தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும்.
இவண்
தொல்.திருமாவளவன்

Similar topics
» பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.
» பார்வதியம்மாவின் மறைவுக்கு வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல்! நாளை சென்னையில் அஞ்சலி கூட்டம்
» பார்வதியம்மாவின் மறைவுக்கு வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல்! நாளை சென்னையில் அஞ்சலி கூட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum