அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.

Go down

பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.  Empty பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.

Post by Admin Sun Feb 20, 2011 6:32 pm

யாழ் மாவட்டம் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை (பார்வதியம்மா) அவர்களின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
மனித ஆயுள் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தை பிரசவித்து முப்பது வயதுக்குள் மரணமேற்படுமாயின் அதை அற்ப ஆயுள் எனவும.; இரண்டாவதாக முப்பது வயதில் இருந்து அறுபது வயதுக்குள் மரணம் ஏற்படின் அதை மத்திம ஆயுள் எனவம் மூன்றாவதாக அறுபது வயதிற்கு மேல் மரணமேற்படின் அதை தீர்க்க ஆயுள் எனவும் எமது முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

எமது மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக பல லெட்சம் பேர் அற்ப ஆயுளுடனும் மத்திம ஆயுளுடனும் அகால மரணமடைந்துள்ளனர் இந்த வகையில் பார்வதியம்மாள் அவர்கள் அவற்றையெல்லாம் தாண்டி தீர்க்க ஆயுளுடன் இயற்கை எய்திருக்கிறார்.

பிறக்கின்ற மனிதர்கள் அனைவரும் இறந்துதான் ஆக வேண்டும் ஆனால் அவர்கள் வாழும் காலத்தில் என்ன நற்பணிகளை செய்தார்களோ அதைப் பொறுத்துத்தான் உலகம் அவர்களைப் போற்றும்.

இந்த நேரத்தில் இறைவனடி சேர்ந்த பார்வதியம்மாளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு அவரின் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் தேசிய கூட்மைப்பானது தங்களது ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையம் தெரிவித்துக்கொள்கின்றது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum