தமிழினியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
Page 1 of 1

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி எதிர்வரும் மார்ச் மாதம் 21ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் தமிழினி தொடர்பான விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டு அதன் விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்;.
எனினும், சந்தேக நபர் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசணைகள் இதுவரை கிடைக்கவில்லை என குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலோசனைகளை துரிதமாக பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான் ரஷ்மி சிங்கப்புலி, விளக்கமறியல் தண்டனையை எதிர்வரும் மார்ச் 21 ம் திகதி வரை நீடிக்க உத்தரவிட்டார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர், தமது விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்திற்கு வழங்கிய மூலப்பிரதியை ரகசிய காவல்துறை திணைக்களத்திடம் கையளிக்குமாறு, கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி நீதிமன்ற பதிவாளருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டு வந்த ஜோஜ் மாஸ்டர் மற்றும் தயா மாஸ்டருக்கு எதிரான வழக்குகள் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலையான நிலையில், வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு மே 9 வரை விளக்கமறியல் நீடிப்பு
» கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்
» மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது! 15ம் திகதி வரை விளக்கமறியல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum