கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்
Page 1 of 1

கடந்த காலங்களில் கொழும்பில் தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களுக்கு ஒத்தாசையாகச் செயற்பட்ட எண்மருக்கு கொழும்பு நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களினை நடாத்தியவர்களுக்குத் தங்குமிடம், போக்குவரத்து, தாக்குதலுக்கான புலனாய்வுத் தகவல்களைப் பெற உதவி செய்தல் போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எண்மருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் தனித்தனியாக கைது செய்யப்பட்ட அவர்கள் எண்மரும் நேற்று கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
பிரஸ்தாப சந்தேக நபர்கள் எண்மரும் பல இடங்களில் மறைவாகத் தங்கி தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களிடம் தொடர்ந்தும் தகவல்களைப் பெற விசாரணை நடாத்த அனுமதிக்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிசார் விடுத்த வேண்டுகோளுக்கும் நீதிபதி அனுமதியளித்தார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» தமிழினியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
» புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு மே 9 வரை விளக்கமறியல் நீடிப்பு
» மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது! 15ம் திகதி வரை விளக்கமறியல்
» கொழும்பில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ள கடற்கரையோர சடலங்கள்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum