அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது

Go down

அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது  Empty அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது

Post by MayA Thu Feb 24, 2011 5:17 am

அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இருந்தே ஆரம்பமாகியிருப்பது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மத்திய கிழக்கில் நடைபெறும் அரச எதிர்ப்புணர்வு போராட்டங்களை இலங்கையின் அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த எதிர்ப்பலை ஆரம்பித்துள்ளதாக ரூபவாஹினியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் வெறுமனே அரச சார்பு செய்திகளை மாத்திரம் ஒளிபரப்புவதன் காரணமாக ரூபவாஹினி செய்திகளின் நம்பகத்தன்மை தற்போது கடுமையாக குறைந்து போயுள்ளமை அண்மைய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

முன்னொரு காலத்தில் ரூபவாஹினி தொலைக்காட்சியின் செய்தியானது தனியார் தொலைக்காட்சிகளின் செய்திகளுடன் போட்டி போட்டு முதலாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது.

ஆயினும் தற்போது ரூபவாஹினி செய்திகள் ஏனைய செய்திகளுடன் ஒப்பிடுகையில் ஆகக்குறைந்த பார்வையாளர்களே பார்வையிடும் அளவுக்குக் கீழ் மட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் அரசாங்கத்தின் போக்குகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரூபவாஹினி செய்திச் சேவையின் பணியாளர்கள் தங்களை வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யுமாறு அதன் தலைவரைக் கோரியுள்ளார்கள்.

அத்துடன் அரசாங்கத்தின் போக்குகள் குறித்து கூட்டுத்தாபனத்திற்குள்ளேயே பகிரங்கமாக விமர்சிக்கவும் தொடங்கி விட்டார்கள். அதன் காரணமாக அரசாங்க உயர்மட்டம் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» கனடாவில் இருந்து வந்த கணவன் ஆயுததாரிகளின் துணையுடன் மீசாலையில் மனைவியை கடத்திக்கொலை
» புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்
» வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது
» ஒசூரில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி
» யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் தப்பியோடினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum