அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது

Go down

வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது  Empty வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது

Post by kaavalan Mon Jan 03, 2011 1:16 am

வன்னியில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட 20 வயதான இளைஞரையும் மேலும் நான்கு பேரையும் கையடக்க தொலைபேசியின் மூலமான குறுஞ்செய்தி காப்பாற்றியுள்ளது.
நேற்று காலை 5.30 அளவில் மாணவனான கஜீவன் பவனீதரன், பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வரும் போது கிளிநொச்சி நகரில் வைத்து பச்சை நிறை ஆடை அணிந்தவர்களால், பஸ் போன்ற வாகனம் ஒன்றில் கடத்திச்செல்லப்பட்டார்.

ஏ 9 வீதியின் ஊடாக அவரை கடத்திச்செல்லும் போது பவனீதரன் தமது கையடக்க தொலைபேசியின் மூலம் தாம் கடத்திச்செல்லப்படுவதை தமது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் அவரும் அவருடன் கடத்திச்செல்லப்பட்ட ஏனைய நான்கு பேரும் வவுனியாவில் வைத்து காப்பாற்றப்பட்டனர்.

எனினும் அவர்களை கடத்தியவர்கள் யார், கடத்தப்பட்ட ஏனைய நான்கு பேரும் யார் என்ற விடயங்களை வவுனியா பொலிஸார் தர மறுத்து விட்டனர்.

இந்தநிலையில் இலங்கைப் படையினருடன் இணைந்து இயங்கும் புலனாய்வு பிரிவினரே அவர்களை தென்னிலங்கைக்கு கடத்திச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம், மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்ட நிலையில் வடக்கின் தமிழ்ப் பிரதேசங்களில் கடத்தல்களும் கொலைகளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
» நாங்கள் வீடுகள் கேட்கவில்லைஉணவு கேட்கவில்லை கடத்தப்பட்ட எங்கள் பி;ள்ளையைகணவன்மாரை மீட்டுத்தாருங்கள்
» வன்னியில் மக்கள் கொல்லப்படவில்லையாம்!- ஐ.நா அறிக்கைக்கு எதிராக வாய்திறந்தார் பிள்ளையான்
» வன்னியில் 2009 மே மாதம் அரச படைகளின் தாக்குதலில் படுகொலையான, படுகாயமடைந்த மக்களின் நிழற்படதொகுதி
» அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum