அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

"நோ்டோ" அமைப்பு குமரன் பத்மநாதனுடையது தான்: அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

Go down

"நோ்டோ" அமைப்பு குமரன் பத்மநாதனுடையது தான்: அமைச்சர் தினேஷ் குணவர்த்தன  Empty "நோ்டோ" அமைப்பு குமரன் பத்மநாதனுடையது தான்: அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

Post by MayA Thu Feb 24, 2011 5:22 am

வடக்கு கிழக்கு கிராமிய அபிவிருத்தி மன்றம் எனப்படும் நோ்டோ அமைப்பு விடுதலைப் புலிகளின் முன்னை நாள் அனைத்துலகப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுடையது தான் என்பதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இன்று பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதுவரை காலமும் குமரன் பத்மநாதன் தனக்கும் நோ்டோ அமைப்புக்கும் தொடர்பில்லை என்பது போல ஊடகங்களிடம் காட்டிக் கொள்ள முயன்றார். அவர் இன்னும் ஒரு கைதியாகவே இருப்பதாகவும், அவருக்கு சமூக சேவை அமைப்புகள் எதனையும் உருவாக்குவதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூட அண்மையில் ஒரு ஊடகவியலாளர் மகாநாட்டில் அடித்துக் கூறியிருந்தார்.

அவ்வாறான நிலையிலேயே இன்று அமைச்சர் தினேஷ் பாராளுமன்றத்தில் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். நோ்டோ அமைப்பின் செயலாளராக குமரன் பத்மநாதன் செயலாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கான சமூக சேவை விடயங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைப்பின் முகவரியாக கதிரேசன் வீதி, வைரவப் புளியங்குளம், வவுனியா என்ற முகவரி பதியப்பட்டுள்ளதாகவும், கடந்த 2010 ஜுலை மாதம் ஒன்பதாம் திகதி முதல் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» முரளிதரனுக்கும் கே.பி.க்கும் பொதுமன்னிப்பு வழங்க முடியாது! சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை தான் வழங்கப்பட முடியும்: சட்டவல்லுனர்கள் வாதம்
» முரளிதரனுக்கும் கே.பி.க்கும் பொதுமன்னிப்பு வழங்க முடியாது! சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை தான் வழங்கப்பட முடியும்: சட்டவல்லுனர்கள் வாதம்
» இலங்கையில் கொள்ளையடிப்பவர்கள் தான் கோடீஸ்வரர்கள்: புதிய ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
» இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாக அமையும் - பா.ம.க. ராமதாஸ்
» மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: அமைச்சர் பசில் ராஜபக்ஷ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum