அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐ.பி.எல். அனுபவம் கைகொடுக்கும் : பிராவோ நம்பிக்கை

Go down

ஐ.பி.எல். அனுபவம் கைகொடுக்கும் : பிராவோ நம்பிக்கை Empty ஐ.பி.எல். அனுபவம் கைகொடுக்கும் : பிராவோ நம்பிக்கை

Post by theepan Thu Feb 24, 2011 6:22 am

உலகக் கிண்ணத் தொடரில் சாதிக்க ஐ.பி.எல். அனுபவம் கைகொடுக்குமென மேற்கிந்திய துணைக் கப்டன் டுவைன் பிராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பத்தாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. இதில் மேற்கிந்தியா, தென்னாபிரிக்கா, அணிகள் மோதும் "பி' பிரிவு லீக் போட்டி டில்லியில் இன்று நடக்கிறது. இது குறித்து டுவைன் பிராவோ கூறியதாவது;
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ள இருப்பது சவாலான விடயம். எங்கள் அணியிலுள்ள 5 முதல் 6 வீரர்கள் இந்திய மண்ணில் நடக்கும் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். இதனால் இந்திய மைதானங்கள் குறித்து நன்கு அறிந்திருப்பார்கள். இந்த அனுபவம் உலகக் கிண்ணத் தொடரில் சாதிக்க நிச்சயம் கைகொடுக்கும்.
தென்னாபிரிக்க அணியில் கப்டன் ஸ்மித், டுமினி உள்ளிட்டோர் ஐ.பி.எல். தொடரில் விளையாடியவர்கள். எனவே அவர்களுக்கும் இங்குள்ள ஆடுகளம் குறித்த அனுபவம் இருக்கும். இருப்பினும் கிடைத்த அனுபவத்தை போட்டியில் சிறப்பாக வெளிப்படுத்துபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். எனவே ஐ.பி.எல். தொடர் மூலம் கிடைத்த அனுபவத்தை சரியாக பயன்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம்.
காயம் காரணமாக விக்கெட் காப்பாளர் கார்ல்டன் பாக். அட்ரியன் பரத் வெளியேறியது பின்னடைவான விடயம். இவர்களுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று வீரர்கள் திறமையானவர்கள் என்பதால் இது குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. காயம் என்பது இயற்கையான ஒன்று.
தென்னாபிரிக்க அணியை 1996 இல் நடந்த உலகக் கிண்ண அரையிறுதி மற்றும் சாம்பியன்ஸ் கிண்ணம் உள்ளிட்ட மிகப்பெரிய தொடர்களில் வீழ்த்தியுள்ளோம். முந்தைய செயல்பாடுகள் குறித்து அதிகம் சிந்திக்காமல் ஒவ்வொரு போட்டியிலும் முழுதிறமையை வெளிப்படுத்தினால் சுலப வெற்றி பெறலாம். இம்முறை சகலதுறை வீரர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். எங்கள் அணியில் போலார்ட், கெய்ல் உள்ளிட்ட திறமையான சகலதுறை வீரர்கள் இருப்பது பலம். எனவே இம்முறை கிண்ணத்தை வெல்ல முழுவீச்சில் போராடுவோமென்றார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum