நான் அரச ஊழியர் மட்டுமே. என்னால் அரசியல் பேச முடியாது! - பிரித்தானிய தூதுக் குழுவிடம் யாழ்.அரச அதிபர்
Page 1 of 1

நான் அரச ஊழியர் மட்டுமே. அரசியல்வாதி இல்லை என்னால் அரசியல் பேச முடியாது என யாழ்.வந்த பிரித்தானிய தூதுக் குழுவிற்கு யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் விளக்கமளித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் அரசியல்,சமகால நிலைமைகள் தொடர்பில் அறிவதற்கென ஜீன் லம்பட் தலைமையில் 12பேர் கொண்ட குழு யாழ்.வந்துள்ளது. இந்தக் குழு இன்று மாலை7 மணியளவில் அரச அதிபரை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் பிரித்தானிக் குழு அரச அதிபரிடம் வினவியுள்ளது. அதற்கு நான் அரசியல் வாதி இல்லை தேர்தல் ஆணையாளரின் தீர்மானம்.
ஆதனைத்தான் நான் வெளியிட்டிருக்கின்றேன் அதற்குமேல் எதனையும் என்னால் கூறமுடியாது என்றுள்ளார்.
தொடர்ந்து தூதுக்குழு வடக்கில் மீள்குடியேற்றம் எந்த நிலையில் உள்ளது? பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் உதவிகள் மக்களை சென்றடைகின்றதா? பொது வேலைத்திட்டங்களில் இராணுவத்தினரை இணைத்துக் கொள்ள முடியாதா? போன்ற விடயங்கள் தொடர்பில் சுமார் ஒரு மணித்தியாலம் பேசியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
இலங்கை வந்துள்ள தெற்காசிய பிராந்தியத்திற்கான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தூதுக்குழுவினர் வடபகுதியில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.
இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கி வந்துள்ள லண்டன் கிறீன் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகிய ஜீன் லம்பட் வவுனியாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்னர் வடபகுதியில் இடம்பெற்று வருகின்ற புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க நிலைமைகள் பற்றி அறிந்து கொள்ளவும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் இந்த நிலைமையில் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்வதற்காகவே வந்திருப்பதாகக் கூறினார்.
அத்துடன் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் என்ற ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிதி என்ன வகையில் பயன்படுத்தப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு எந்த வகையில் அந்தி நிதி பயன்படுகின்றது என்பதையும் கண்டறிவதற்காகப் பல்வேறு வேலைத்திட்டங்களையும் பார்வையிடுவதற்காக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா மருத்துவமனை, மனிக்பாம் இடைத்தங்கல் முகாம், கண்ணிவெடி அகற்றும் பணிகள் என்பவற்றையும் இக்குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» இராணுவ அதிகாரி கூறிய கருத்தைத்தான் அப்படியே கூறினேனே தவிர, நானாக எதையும் கூறவில்லை - யாழ்.அரச அதிபர்
» ஐ.நா.வின் நிபுணர் குழுவிடம் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது
» சரத் பொன்சேகாவை விடுவிக்க என்னால் முடியும்: சஜித் பிரேமதாச
» தமிழர்களின் போராட்ட எதிரொலி: பிரித்தானிய அமைச்சரை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவில்லை
» இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிமேல் இரட்டைக் குடியுரிமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum