அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இராணுவ அதிகாரி கூறிய கருத்தைத்தான் அப்படியே கூறினேனே தவிர, நானாக எதையும் கூறவில்லை - யாழ்.அரச அதிபர்

Go down

இராணுவ அதிகாரி கூறிய கருத்தைத்தான் அப்படியே கூறினேனே தவிர, நானாக எதையும் கூறவில்லை - யாழ்.அரச அதிபர் Empty இராணுவ அதிகாரி கூறிய கருத்தைத்தான் அப்படியே கூறினேனே தவிர, நானாக எதையும் கூறவில்லை - யாழ்.அரச அதிபர்

Post by priyanka Sun Dec 19, 2010 2:22 am

புலிகளையோ, இராணுவத்தினரையோ தெரியாத ஆள் நான் கிடையாது. இரண்டு தரப்பிற்குள்ளும் நான் கடமையாற்றியிருக்கின்றேன். அவர்களால் ஒரு கடமை தவறாத அதிகாரியாக மட்டுமே நான் பார்க்கப்பட்டிருக்கின்றேன். என்னை விமர்சிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியாது என்று யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,

உலகில் எந்த நாட்டிலும் நடக்காதபடி முன்னதாகவே புதைகுழிகளும், சவப்பெட்டிகளும் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் கொடுரம் இந்த நாட்டில் நடந்தது. அதனை நான் பார்த்திருக்கின்றேன். கொடுரமான யுத்தம் மற்றும் அவலங்களுக்குள் நான் கடமையாற்றியிருக்கின்றேன்.

அந்த உண்மைகளை புரிந்து கொள்ளாதவர்கள். என்னுடைய தியாகம் நிறைந்த சேவையை கருத்தில் கொள்ளாதவர்கள் இப்படி வேலை செய்கின்றார்கள். யாருடனும் உல்லாச விடுதிக்கு போய் வர வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது.

எமது கலாச்சாரத்தையும் விழுமியங்களையும் பின்பற்றுகின்றவராக இன்றைக்கும் நான் இருக்கின்றேன். உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக நான் இராணுவ அதிகாரி கூறிய கருத்தைத்தான் அப்படியே கூறினேனே தவிர நானாக எதையும் கூறவில்லை.

ஆணைக்குழு முன்னால் சாடசியமளித்ததை சுட்டிக்காட்டுகின்றார்கள் அன்றைக்கு சரியான மொழிபெயர்ப்பாளர் அங்கிருக்கவில்லை என்பதுதான் உண்மை.

சரியாக புரிந்து கொண்டு செய்திகளை பிரசுரியுங்கள் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னைய அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளுடன் போருக்கு விரும்பியிருக்கவில்லை: முன்னை நாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்டன் ஜெயநாதன்
» நான் அரச ஊழியர் மட்டுமே. என்னால் அரசியல் பேச முடியாது! - பிரித்தானிய தூதுக் குழுவிடம் யாழ்.அரச அதிபர்
» மஹிந்த ராஜபக்ஷ யாழ் விஜயம்! வீதிகள் புனரமைக்கப்படுகிறது
» யாழ்.இணுவில் பகுதியில் இரு மாணவர்களை காணவில்லை
» தடுப்புக்காவலில் உள்ள 676 புலி உறுப்பினர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum