பார்வதியம்மாவின் அஸ்தியைச் சிதைத்து மகிழும் சிங்களம்! காட்டு மிராண்டித்தனத்தின் மொத்த அடையாளம்!
Page 1 of 1

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார், பார்வதியம்மாவின் அஸ்தியைச் சிதைத்தும், அதன்மீது வாகனக் கழிவு எண்ணையைக் கொட்டி, சுட்டு வீசப்பட்ட நாய்களின் உடல்களை அதில் போட்டு எரித்து அசிங்கம் செய்தும், பௌத்த சிங்கள இனவெறி அரசு மிகக்கீழ்த்தரமான, காட்டுமிராண்டித்தனமான தனது போக்கை அப்பட்டமாக வெளிக்காட்டி நிற்கின்றது.
தமிழினத்தின் தாயாக, உலகத்தமிழ் இனத்தால் அன்போடு போற்றிவணங்கப்படும், பார்வதியம்மாவின் அஸ்தி மீது சிங்கள அரசு நடத்திய அசிங்கமான இந்தப் ‘போரால்’ தமிழீழ மக்கள் மட்டுமன்றி, உலகத் தமிழர் அனைவரும், கோபத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.
மனித நாகரீகத்துக்குச் சவால் விடும் வகையில், மகிந்த அரசு மேற்கொண்டுள்ள கீழ்த்தரமான, மோசமான, அசிங்கமான இந்தச் செயற்பாட்டை, பிரான்ஸ் தமிழர் நடுவம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
பார்வதியம்மாவின், இறுதிவணக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிடாமல், பொதுமக்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் சிறீலங்காப்படையினரால் தடைகளைப் போட்டும் மிரட்டியும் தடுக்கப்பட்டிருந்தனர்.
பார்வதியம்மாவிற்கு வணக்கம் செலுத்தி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிங்களப்படையினரால் கிழித்தெறியப்பட்டன. துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கறுப்புக்கொடிகள் அகற்றப்பட்டன.
இறுதிப்பயணத்தைக் கனப்படுத்தும் வகையில் தமது வணிக நிறுவனங்களைப் பூட்டி ஆதரவு வழங்கிய வணிகர்கள், சிங்களப்படையினரால் கடுமையாக விசாரிக்கப்பட்டனர்.
சிங்கள இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த பார்வதியம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றோர் அனைவரும், ஒளிப்படக்கருவிகளில் சிங்கள இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் படம்பிடிக்கப்பட்டு;ள்ளனர்.
இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய இந்து மதகுரு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
சிங்கள இராணுவத்தாலும், சிங்கள இராணுவப் புலனாய்வுப் பிரிவினராலும், கூலிக்குழுக்களாலும், முழுநேரமாகக் கண்காணிக்கப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்துவருகின்றனர்.
அவர்கள் வாழும் போதும் சிங்கள அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைக்கும், அவமானப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று, அவர்கள் இறந்தபின்னும் சிங்கள அரசால் அவமானப்படுத்தப்பட்டு வருவது நடைபெறும் சம்பவங்களுக்கூடாக வெளிப்பட்டுநிற்கின்றது.
தமிழீழ மக்களுக்காக தம் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை, சிதைத்தழித்து அதன்மீது, இராணுவ முகாம்களை அமைத்து, தமது தமிழின அடக்குமுறையையும், தமிழர் மீதான தமது அவமானப்படுத்தலையும் குறியீட்டு முறையிலும் செயற்பாடுகள் மூலமும் வெளிப்படுத்தும், சிங்கள அரசு, பௌத்தம் அல்லாத பிற மதங்களை அவமானப்படுத்தவும், புண்படுத்தவும் செய்கின்றது. இது பலவழிகளில் நடந்தேறிவருகின்றது.
இந்து மத அனுட்டானங்களை அவமானப்படுத்தும் சிங்கள அரசின் போக்கு பார்வதியம்மாவின் அஸ்தி மீதான தாக்குதலின் மூலம் மீளவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பௌத்த சிங்களப் பேரினவாதம், தமிழ் மக்கள் மீது உடல் ரீதியாகவும் உளரீதியாகவும், சமூக பண்பாட்டு, தளங்களில் மேற்கொள்ளும் இத்தகைய தாக்குதல்கள் இலங்கைத்தீவில் சிங்களமும் தமிழும் சேர்ந்து வாழக்கூடிய எந்த ஏற்பாடுகளும் சாத்தியமில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது.
சிங்கள அரசின் இக்காட்டுமிராண்டித்தனமான செய்கைகளை, தொடர்ச்சியாக, சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு நாம் எல்லோரும் எடுத்துச் செல்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம். பிரான்ஸ்

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» ஈழத்துரோகிகளை அடையாளம் காணவேண்டும் - வைகோ கோரிக்கை
» மட்டக்களப்பில் பொலித்தீன் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
» மட்டக்களப்பில் பொலித்தீன் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum