அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பொறுமையாக காத்திருந்து வென்ற இயக்குநர்!

Go down

பொறுமையாக காத்திருந்து வென்ற இயக்குநர்! Empty பொறுமையாக காத்திருந்து வென்ற இயக்குநர்!

Post by thadcha Sat Feb 26, 2011 8:48 pm

மும்பை என்றதும் நம் நினைவில் விரியும் பிம்பங்களில் கேட்வே ஆப் இந்தியா ஒன்று. தாஜ் ஹோட்டல் மற்றொன்று. தீவிரவாத தாக்குதலின் பின்னர் இந்த இரு இடங்களிலும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. பல படங்களுக்குக் கேட்ட போதும் கிடைக்காத அனுமதி, ஒரு தமிழ்படத்திற்குக் கிடைத்து படப்பிடிப்பையும் நடத்தி விட்டு வந்திருக்கிறார்கள். அந்தப்படம் 'வந்தான் வென்றான்'. 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' படங்களுக்கு பின் ஆர். கண்ணன் இயக்கும் படம். 'நான் கடவுள்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய வெற்றி படங்களை அடுத்து தயாரிப்பாளர் கே.எஸ். சீனிவாசன் தன் வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படமிது. ஜீவா, டாப்ஸி, நந்தா, சந்தானம் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையின் அவசியம் கருதி மும்பையின் முக்கிய இடங்களில் படமாக்கப்பட வேண்டுமென விடாப்பிடியாக இயக்குநர் கண்ணன் தொடர் முயற்சி செய்தார் அதற்கு பலனும் கிடைத்தது. மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்த இரண்டு இடங்களிலும் படப்பிடிப்பிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பே, இந்த படத்தின் கதையை தயார் செய்த கண்ணன், அப்போது படத்தின் காட்சிகள் எந்த எந்த பகுதிகளில் படமாக்கப்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்துவிட்டாராம். அதனால் எப்படியும் இந்த இரண்டு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியே தீருவேன் என்று உறுதியாக இருந்திருக்கிறார். அதன்படி படம் பற்றியும் கதை பற்றியும் காட்சிகள் பற்றியும் எழுத்து மூலமாக விவரங்கள் கொடுத்து, எப்படியோ அரசிடம் படப்பிடிப்பிற்கு அனுமதி பெற்றியிருக்கிறார். மேலும் துப்பாக்கி வெடிப்பது, வெடிகுண்டு வெடிப்பது, போன்ற காட்சிகள் எடுக்கக்கூடாது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் படப்பிடிப்பை முடித்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் அடையாள அட்டை, முகவரிச் சான்று தர வேண்டும் என்று அரசு நிபந்தனைகள் விதித்திருக்கிறது.
அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்த இயக்குநர், அனைத்து ஆதாரங்களையும் அரசிடம் கொடுத்திருக்கிறார். அந்த ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னரே படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்திருக்கிறார்கள். இந்த நடைமுறைகள் முடிய ஆறுமாதங்கள் ஆகிவிட்டதாம். இப்படி ஆறுமாதங்கள் காத்திருந்து, அந்த இடத்தில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் இயக்குநர் கண்ணன். பொறுமையாக காத்திருந்து அமைதியாக 3 நாட்கள் அங்கே படப்பிடிப்பு செய்தோம். ஜீவா-டாப்ஸி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மட்டுமல்லாமல் சில ஆக்ஷன் காட்சிகளையும் எடுத்தோம், என்றார் இயக்குநர் கண்ணன். இவை தவிர மும்பையில் பிரபலமான முக்கியப் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மும்பை ஜுஹு பீச், மெரின் டிரைவ், சென்னையில் அண்ணாசாலை போன்று மும்பையின் முக்கியமான சாலைகளிலும் படமாக்கியுள்ளனர். ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னும் சாதனைக்கு பின்னும் ஏதாவது இழப்புக்கள் இருக்கும். ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறவேண்டும் என்பார்கள். ஆனால் எதையும் இழக்காமல் விரும்பியதை பெற முடியும் என்பதை குறிக்கோளில் முழுக்கவனம் செலுத்தி சக்தியை ஒரு மையத்தில் குவித்து உண்மையாக முயற்சி செய்தால் எதையும் இழக்காமலேயே வெற்றி பெற முடியும். என்பதை சொல்வதுதான் கதை என்கிறார். தேவைப்படும் வசதிகளை தயக்கமின்றி செய்து கொடுத்து வரும் தயாரிப்பாளரையும் உட்காரச் சொன்னால் நடு ரோட்டில்கூட உட்காரத் தயங்காத நாயகன் ஜீவாவையும் மறக்க முடியாது. என்று நன்றியுடன் கூறுகிறார் இயக்குநர். வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிக்கும் 'வந்தான் வென்றான்' தொழில் நுட்பக் கலைஞர்கள்: கதை, திரைக்கதை, இயக்கம்: ஆர் கண்ணன். வசனம்: பட்டுக்கோட்டை பிரபாகர். இசை: தமன். ஒளிப்பதிவு: பி.ஜி முத்தையா. பாடல்கள்: தாமரை, மதன்கார்க்கி, யுகபாரதி. கலை: ரெம்போன். தயாரிப்பு: கே.எஸ் சீனிவாசன். கண்ட இடத்தை வெல்வதில்தான் நீங்கள் ஜெயம் கொண்டவராச்சே.....!
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum