அப்ரிடியின் பந்துவீச்சால் கனடாவை வென்ற பாகிஸ்தான்
Page 1 of 1

கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பையின் 17-வது லீக் ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வென்றது பாகிஸ்தான்.
அப்ரிடி அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 43 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய கனடா 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பூவா தலையா வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கனடாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஹபீஸ் 11, ஷெஸôத் 12, பின்னர் வந்த யூனிஸ்கான் 6, கம்ரான் அக்மல் 16 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 67 என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதன்பிறகு வந்த மிஸ்பா-உமர் அக்மல் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது.
உமர் அக்மல் 48 ரன்களிலும், மிஸ்பா 37 ரன்களிலும், அப்ரிடி 20 ரன்களிலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 43 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 44 ரன்களுக்கு மட்டும் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கி கனடா அணியில் தொடக்க வீரர்கள் குணசேகரா 8 ரன்களிலும், நிதிஷ் குமார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த சர்க்காரி- கேப்டன் பகாய் ஜோடி விக்கெட் வீழ்ச்சியை தடுப்பதற்காக கடுமையாகப் போராடியது. இருப்பினும் அப்ரிடியின் பந்துவீச்சில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார் பகாய்.
இதையடுத்து சர்க்காரியுடன் ஜோடி சேர்ந்தார் ஹன்ஸ்ரா. அணியின் ஸ்கோர் 104 ரன்களை எட்டியபோது சர்க்காரி 27 ரன்களில் ஆட்டமிழக்கவே மீண்டும் சரிவு தொடங்கியது. அடுத்த ஓவரிலேயே ஹன்ஸ்ராவை 43 ரன்களில் வெளியேற்றினார் அப்ரிடி.
அதன்பிறகு வந்த ரிஸ்வான், கார்டன், பைத்வான் ஆகியோரையும் அடுத்தடுத்து வெளியேற்றினார் அப்ரிதி. இதன் பிறகு களம் புகுந்த பாலாஜி 1 ரன்னிலும், ஒசின்டே ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, அந்த அணி 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

prasath- மட்டுறுத்துனர்
Similar topics
» பொறுமையாக காத்திருந்து வென்ற இயக்குநர்!
» அப்ரிடியின் சுழலில் பந்தில் சுருட்டது கென்யா
» பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்டிற்கு 7 ஆண்டுகள் தடையா?
» அப்ரிடியின் சுழலில் பந்தில் சுருட்டது கென்யா : 205 ஓட்டங்களால் இலகு வெற்றி
» இலங்கையை பிளவுபடுத்தும் மறைமுக முயற்சியில் இந்தியா! - பாகிஸ்தான் த நேசன் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum