அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பெண்கள் 'தம்' அடிச்சா வெயிட் குறையும்: சனா

Go down

பெண்கள் 'தம்' அடிச்சா வெயிட் குறையும்: சனா  Empty பெண்கள் 'தம்' அடிச்சா வெயிட் குறையும்: சனா

Post by thadcha Sat Feb 26, 2011 8:53 pm

பிரகாஷ் ராஜ்- டைரகடர் ராதா மோகன் இருவரும் 'பயணம்' படத்தை,வெற்றி படமாக உற்சாகத்துடன் அறிவித்துள்ளார்கள்.
திரை ரசிக மக்களின் ரசனை, மீடியா ஆதரவால் வெற்றி பாதையில் 'பயணம்' தொடர்வதாக கூறுகிறார்கள்.

பயணம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரும் பிரகாஸ் ராஜ்-டைரக்டர் ராதா மோகன் இருவருடனும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள். தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுன், பயணத்தில் ஆத்மார்த்தமாக நடித்து, சினிமாவில் புது இன்னிங்க்ஸை துவங்கியிருப்பதாக பிரகாஷ் ராஜிடம் கூறினாராம். படத்தில் வரும் காட்சிகளைப்போல நிஜத்திலும் நடந்திருப்பதை டைரகடர் ராதாமோகன் குறிப்பிட்டுள்ளார்.

பயணம் படத்தில் நடித்த சனாகான், பூனம் கவுர் இருவரும் தங்களின் நடிப்பு அனுபவத்தை கூறும் முன்பு, ஜாலியாக பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியும் தெரியாத சனாகான் என்று கலாய்த்தார். பூனம் பயணம் பட டீமுடன் இணைந்து நடித்த அனுபவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது என்றார்.

விமானத்தில் பயணம் செய்யும் அல்ட்ரா மாடர்ன் இளசாக கையில் சிகரெட் பாக்கெட்டுடன் நடித்திருப்பார் சனாகான். டைரக்டர் ராதா மோகன் 'பயணம்' படத்தில் நடிக்க அழைத்ததும் நிறைய வித விதமான உடைகளில், டயலாக் பேசி, பாடி லான்வேஜ்ஜை காட்டி சீரியசாக நடிக்க வேண்டியிருக்கும் என்று கற்பனையோடு காத்திருந்தேன்.

ஆனால் ஒரே ஒரு காஸ்ட்யும் கொடுத்து, கனமான மேக்கப் இல்லாமல் நடித்தது எனக்கு வேடிக்கையான அனுபவமாக இருந்தது. படத்தில் வருவதை போல நிஜத்தில் சிகரெட் 'ஸ்மோக்' பண்ற பெண்ணா என்று கேட்கிறார்கள். எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா?..இல்லையா? என்று சொல்ல முடியாது.

அதிக எடையுள்ள பெண்கள் 'ஸ்மோக்' பண்ணினால், வெயிட் குறைஞ்சு, மெலிஞ்சு ஸ்லிம்மாகிடுவாங்க என்று கலகலத்தார் சனா
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum