அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் சக்தியால் மட்டுமே முடியும்: ஐ.தே.க. பிரமுகர் ஷிரால் லக்திலக

Go down

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் சக்தியால் மட்டுமே முடியும்: ஐ.தே.க. பிரமுகர் ஷிரால் லக்திலக  Empty மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் சக்தியால் மட்டுமே முடியும்: ஐ.தே.க. பிரமுகர் ஷிரால் லக்திலக

Post by kaavalan Sun Feb 27, 2011 4:21 am

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை விரட்டியடிக்க வாக்குப்பலத்தை விட மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் என்பதாக ஐ.தே.க. வின் பிரமுகர்களில் ஒருவரான ஷிரால் லக்திலக்க வலியுறுத்துகின்றார்.
மக்கள் என்னதான் தோ்தல்களில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தாலும் அவையனைத்தும் மோசடியான முறையில் மாற்றியமைக்கப்பட்டு அரசாங்கத்துக்கு ஆதரவான வாக்குகளாக கணக்கெடுப்படுவதால், வாக்குப்பலத்தைக் கொண்டு இந்த அரசாங்கத்தை மாற்ற முடியாது என்று அவர் குறிப்பிடுகின்றார்.

எனவே தற்போதைக்கு மக்கள் பலம் மற்றும் அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பியக்கங்கள் மூலமாக ஏனைய நாடுகளில் ஆட்சிமாற்றங்கள் நடப்பதை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையிலும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் அணி திரள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கை அரசாங்கம் தற்போதைக்கு பொதுமக்கள் அனுபவித்து வரும் அனைத்து உரிமைகளையும் படிப்படியாக இல்லாதொழித்துக் கொண்டு வருகின்றது. இப்படியே போனால் எதிர்காலத்தில் பொதுமக்கள் எந்தவொரு உரிமையையும் அனுபவிக்கவே முடியாத சுதந்திரமற்ற நிலை உருவாகி விடும். நாடு சர்வாதிகார ஆட்சிக்குள் முற்றாக சிக்கிக் கொண்டு விடும்.

எனவே அதனை கவனத்திற் கொண்டு கட்சி பேதங்களுக்கப்பால் பொதுமக்கள் ஒன்றிணைவதன் மூலமாக மட்டுமே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும். இல்லாத போது பொதுமக்கள் தங்கள் சந்ததியினருக்கான வளமான எதிர்காலத்தைக் கற்பனையிலும் நினைக்க முடியாது போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» த.தே.கூட்டமைப்பிற்கு அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும் - வீ.ஆனந்தசங்கரி
» இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிமேல் இரட்டைக் குடியுரிமை
» சரத் பொன்சேகாவை விடுவிக்க என்னால் முடியும்: சஜித் பிரேமதாச
» நான் அரச ஊழியர் மட்டுமே. என்னால் அரசியல் பேச முடியாது! - பிரித்தானிய தூதுக் குழுவிடம் யாழ்.அரச அதிபர்
» முரளிதரனுக்கும் கே.பி.க்கும் பொதுமன்னிப்பு வழங்க முடியாது! சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை தான் வழங்கப்பட முடியும்: சட்டவல்லுனர்கள் வாதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum