விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது யாழ்ப்பாணத்தில் படையினர் கெடுபிடி
Page 1 of 1
விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது யாழ்ப்பாணத்தில் படையினர் கெடுபிடி
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த போராளிகளில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது யாழ்ப்பாணத்தில் கடுமையான கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
சமூகத்தில் எந்தவித பேதமுமின்றி வாழ முடியும் என அரச உயர் மட்டங்களும், படை அதிகாரிகளும் கூறி வருகின்ற போதிலும் யாழ்ப்பாணத்தில் படையினர் பலவாறான நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் அவர்கள் மீது விதிக்கின்றனர்.
அண்மைக்காலமாக விடுவிக்கப்பட்ட போராளிகளின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளை அருகிலுள்ள ஏதாவதொரு முகாமுக்கு வருமாறு அழைத்து வாரத்தில் இரு நாட்கள் அல்லது ஒரு நாள் முகாமுக்கு வந்து கையெழுத்துப் போட வேண்டும் என அறிவுறுத்தி அதனைச் செயற்படுத்தியும் வருகின்றனர்.
கையெழுத்திடத் தவறுபவர்களை தாறுமாறாகத் திட்டுவதுடன், அவர்களது குடும்பத்தினரைக் கடும் தொனியில் அச்சுறுத்தியும் வருகின்றனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் சமூகத்தில் எந்த வித பேதமுமின்றி வாழ முடியும், நாட்டின் எப் பாகத்திலும் சுதந்திரமாக சென்று வர முடியும். ஏன் தொழில் வாய்ப்புக் கருதி வெளிநாடுகளுக்குக் கூட செல்ல முடியும் என அரச உயர் மட்டங்களும், படை அதிகாரிகளும் கூறி வருகின்றனர்.
ஆனால், ஒரு முறை கையெழுத்திட தவறி விட்டால் கூட வீடு தேடி வந்து உரியவர் எங்கே? எங்களுக்குச் சொல்லாமல் வெளியூருக்குக்கூட போகக் கூடாது என படையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட போராளிகளின் பெற்றோர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» முன்னாள் போராளிகள் மீது பழியை சுமத்திவிட்டு உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு
» விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் மட்டக்களப்பில் கைது
» வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்
» வடமாகாணத்தில் பொதுமக்களின் 1200 காணிகள் படையினர் வசம்
» கண்கள், கைகளைக் கட்டிவிட்டு சிகரெட்டினால் சுட்டுத் தாக்கினார்: கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட லண்டன் இளைஞன் தகவல்
» விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் மட்டக்களப்பில் கைது
» வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்
» வடமாகாணத்தில் பொதுமக்களின் 1200 காணிகள் படையினர் வசம்
» கண்கள், கைகளைக் கட்டிவிட்டு சிகரெட்டினால் சுட்டுத் தாக்கினார்: கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட லண்டன் இளைஞன் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum