அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வடமாகாணத்தில் பொதுமக்களின் 1200 காணிகள் படையினர் வசம்

Go down

வடமாகாணத்தில் பொதுமக்களின் 1200 காணிகள் படையினர் வசம்  Empty வடமாகாணத்தில் பொதுமக்களின் 1200 காணிகள் படையினர் வசம்

Post by MayA Thu Feb 24, 2011 5:24 am

கிளிநொச்சி மாவட்டம் உள்ளிட்ட வட மாகாணத்தில் பொது மக்களுக்கு சொந்தமான 1205 காணிகள் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றதில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி எழுப்பிய அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பிலான கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது வட மாகாணத்தில் பொது மக்களின் 1129 காணிகளை தரைப்படையினர் பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வான் 32 காணிகளையும், 35 காணிகளை கடற்படையினரும் பயன்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தவிர குறித்த பகுதியில் உள்ள இரண்டு பாரிய நெல் ஆலைகளையும் தரைப்படையினர் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தரைப்படையினரின் பயன்பாட்டில் இருந்த 470 காணிகளை பொது மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சியவற்றை விரைவில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட பகுதி மக்களின் வாழ்கையை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை எனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை பலாலி உள்ளிட்ட அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது, தற்போது வடக்கில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் 3ல் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஏனைய அதிஉயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» கிழக்கின் பெறுமதியான காணிகள் பலவந்தமாகப் பறித்தெடுக்கப்படுகின்றன: மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க
» பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடிய பாதுகாப்புத் தரப்பினர்
» கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகளைக் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்
» வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்
» விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது யாழ்ப்பாணத்தில் படையினர் கெடுபிடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum