பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை வேண்டும் - கரு ஜயசூரிய கோருகிறார்
Page 1 of 1
பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை வேண்டும் - கரு ஜயசூரிய கோருகிறார்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டமை குறித்து நாட்டில் பாரிய சர்ச்சைகள் எழுந்திருந்தன. இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளியிடுமாறு ஐ.தே.கட்சி பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கோரியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட கூடிய வாக்குகள் சில இரத்தினபுரியில் தொழினுட்ப கல்லூரிக்கு அருகில் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மேற்கொண்ட தீர்மானம் என்ன?, மற்றும் அது தொடர்பான எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை என்ன? என்பவை தொடர்பாக எதிர்வரும் 17 திகதிக்கு முன் வெளியிடப்பட வேண்டும் என அவர் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலில் இந்த குற்றச்சாட்டு கேலிக்கிடமாக எடுக்கப்பட்டமையும், பின்னர் அது தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் இருப்பதாக கரு ஜயசூரிய தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் - அமெரிக்க செனட் யோசனை நிறைவேற்றம்
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை
» த.தே.கூட்டமைப்பிற்கு அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும் - வீ.ஆனந்தசங்கரி
» மஹிந்தவிற்கு அளிக்கப்பட்ட விமான நிலைய வரவேற்பு! எதற்காக மேற்கொள்ளப்பட்டது?
» ஐ.தே.க. இனி எத்தோ்தலிலும் யாருடனும் கூட்டுச் சேராது: பிரதித் தலைவர் கரு ஜயசூரிய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum