அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மஹிந்தவிற்கு அளிக்கப்பட்ட விமான நிலைய வரவேற்பு! எதற்காக மேற்கொள்ளப்பட்டது?

Go down

மஹிந்தவிற்கு அளிக்கப்பட்ட விமான நிலைய வரவேற்பு! எதற்காக மேற்கொள்ளப்பட்டது? Empty மஹிந்தவிற்கு அளிக்கப்பட்ட விமான நிலைய வரவேற்பு! எதற்காக மேற்கொள்ளப்பட்டது?

Post by VeNgAi Wed Dec 08, 2010 2:17 am

பிரித்தானியாவில் கேம்பிரிச் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் அதிபர் உரையாற்ற சென்று புலம்பெயர் உறவுகளால் அவர் முற்றுகையிடப்பட்டு வாய்ப்பு கிடைக்காததால் கவலையோடும் நடுக்கத்தோடும் நாடு திரும்பிய போது ஆளும் வர்க்கத்தினரால் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பினை தமிழ் மக்கள் உற்று நோக்க வேண்டும்.
இந்த புகைப்படத்தை ஒரு தடவை உற்றுப் பாருங்கள்
மஹிந்தவிற்கு அளிக்கப்பட்ட விமான நிலைய வரவேற்பு! எதற்காக மேற்கொள்ளப்பட்டது? Mahinda_airportமஹிந்தவிற்கு அளிக்கப்பட்ட விமான நிலைய வரவேற்பு! எதற்காக மேற்கொள்ளப்பட்டது? Mmmm5
இந்த வரவேற்பானது எதற்காக மேற்கொள்ளப்பட்டது? ஏதாவது மகிந்த வெளிநாட்டுக்கு சென்று சாதித்துவிட்டு வந்ததற்காகவா? அல்லது வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்கியதற்காகவா? இந்த வரவேற்பு. யாருக்கும் இதற்கு விடைதெரியாத புதிராகவே உள்ளது.

ஆனால் இந்த வரவேற்பில் கலந்து கொண்ட பேரினவாத சக்திகளான சிறீலங்கா அமைச்சர்களின் முகங்களிலுள்ள சந்தோசத்தை கவனமாக பார்க்க வேண்டும். இதெல்லாம் எதற்காக? பாரிய மனித பேரவலத்தை நடாத்தி முடித்துவிட்டு இன்னமும் அம்மக்களுக்கு தற்காலிக மனிதாபிமான உதவிகளைக்கூட செய்யாத ஒரு அரச தலைவருக்கு ஏன் இப்படி வரவேற்பு.

தமிழர்களையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் சிதைத்து ஒட்டுமொத்த தமிழினத்தையே பேரவலத்திற்குள் தள்ளிய ஒருநாட்டின் தலைவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு இதுவானாலும். இதன் உள்ளார்ந்த அர்த்தம் ஒன்றுதான். அதாவது தமிழர்களை கொலைசெய்தமைக்காக பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்யப்படாமல் அவர் தப்பிவந்தமைக்காக அவர்கள் சந்தோசப்பட்டு அவரைப் பார்க்க வந்த காட்சி அது.

அதாவது எத்தனை உயிர்களை பலியாக்கி எவ்வளவு பேரை அங்கவீனர்களாக்கிய ஒரு வீரன் நாட்டுக்கு திரும்புவது எவ்வளவு சந்தோசத்தை அவர்களுக்கு கொடுத்திருந்தது என்பதைவிட தமிழர்களை வதைத்த பின்பு அவர் எவராலும் கைது செய்யப்படாமல் நாடு திரும்பியது அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது.

அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது ஒருபக்கமிருக்க தமிழர்களின் பிரதிநிதிகளாக காட்டிக்கொள்ளும் அரச அடிவருடி கட்சியை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாகூட அங்கு வந்து சந்தோசம் கொண்டாடியிருக்கின்றார் என்றால் அவருடைய துணிச்சலை தமிழர்கள் ஆழமாக நோக்க வேண்டும்.

இவ்வளவு வலிபட்ட மக்களின் காயங்கள் ஆறுமுன்பே அவர்களின் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் காரணமானவர் பிடிபடாமல் தப்பிவந்துவிட்டார் என்பதைவிட அவர்களுக்கு பிழைப்பிற்குகூட அவர் இருந்தால் தான் உண்டு என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார் முஸ்லீம். அமைச்சர்களே பலர் அங்கு செல்லாத போதிலும் தமிழராக இருந்து அவரை வரவேற்க சென்றார் என்றால் அவரின் துணிச்சல் எப்படியிருக்கின்றது.

ஆறுமுகன் தொண்டமான் சென்றார் என்றால் நாங்களென்ன சும்மாவா என்று போட்டிபோட்டு செல்லவில்லை. இவர் சென்றமையானது “உங்களை வதைத்தவனையே நான் அணைப்பேன் ஆனால் நீங்கள் என்னை அணைக்கவேண்டும்” என்ற கொள்கை.

உங்கள் நாடகங்கள் எல்லாவற்றையும் ஆடுங்கள் ஆனால் இவற்றையெல்லாம் ஆண்டவன் ஒருவன் பாத்துக்கொண்டுதான் இருக்கின்றார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த கட்டமாக வலிபட்ட மக்களையே வைத்து ஒரு நாடகமாடியிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் நிவாரணம் தருவதாக அழைப்பது போன்று யாழ் கிராமப்புற மக்களை வைத்து முன்னர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை ஏன் வன்னியிலும் அரங்கேற்ற முடியாது என எண்ணி தனது சகாக்களையும் இராணுவப் புலனாய்வாளாகளையும் வைத்து சாதிக்க முயன்று தோற்றுப்போனார்.

கட்டாயத்தின் பேரில் ஒவ்வோர் வீடுகளுக்கும் முதல்நாளே ஆட்கள் அனுப்பப்பட்டு கட்டாயம் வரவேண்டும். உயரதிகாரி உங்களை சந்திக்க வேண்டும் என்று உங்கள் அடியாட்கள் சொல்லும்போதே எங்களுக்கு புரியாமலா போனது. நீங்கள் அப்படி சொல்லாவிட்டாலும் ஒருக்கா வாங்கோ என்றால் அவர்கள் வருவார்கள். ஏனென்றால் அவர்கள் தற்போது மிகவும் நொந்து யோயுள்ளார்கள். அதற்காக எல்லோரிடமும் பொறுமையை சோதிக்காதீர்கள். வராவிட்டால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இனி அவர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை எஞ்சிய உயிர்களைவிட. ஆனால் உணர்வு மட்டும் எப்போதுமே மாறிவிடப்போவதில்லை என்பதை உங்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம். உங்கள் அடாவடித்தனங்களை எங்கள் பிரதிநிதியூடாகவே நாங்கள் பி.பி.சி யிடம் விளக்கமாக சொல்லிவிட்டோம். அதற்காக அவரையும் தீர்த்துக்கட்டும் திட்டம் வேண்டாம் கருத்தை கருத்தால் வெல்லுங்கள்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை வேண்டும் - கரு ஜயசூரிய கோருகிறார்
» விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரெஞ்சுப் பிரஜைகள் என காவல்துறை தெரிவிப்பு
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» இலங்கை விமான படைக்கு சொந்தமான இரு கிபீர் விமானங்கள் விழுந்து நொறுங்கின
» கிபீர் விமான விபத்து! விமானப்படைக்குப் கோடிக்கணக்கில் இழப்பு! ஐவர் அடங்கிய குழு விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum