சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு
Page 1 of 1
சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு
சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் பெண் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இதனை முதலில் கண்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மம்மியில் அணிவிக்கப்பட்டிருந்த ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனுடன் வேறு இரு கல்லறைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மம்மியானது மிகவும் நுணுக்கமான முறையில் பதனிடப்பட்டுள்ளது. தலை முதல் கால்பாதணிகள் வரை ஆச்சரியப்படத்தக்க வகையில் இது பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதன் கண் இமைகள், முடி, உடலின் தோல் ஆகியன இற்றைக்கும் மிஞ்சி இருப்பதானது, சீனர்களும் மனித உடல் பதனிடலில் சிறந்து விளங்கியமையை எடுத்துக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் வலது கையில் தோலானது பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன் அதில் மோதிரமொன்றும் காணப்படுகின்றது. இம் மம்மியின் உயரம் 1.5 மீற்றர்களாகும். மண் நிற திரவம் அடங்கிய சவப்பெட்டி ஒன்றினுள் இருந்தே இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பட்டு மற்றும் சிறிது பருத்தியினால் ஆன ஆடையே இம் மம்மிக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டு மற்றும் பருத்தியை பாதுகாப்பது கடினம் என்ற போதிலும் இம் மம்மியில் அவை சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெங் வீயினில் உள்ள நூதனசாலை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார்
thadcha- உறுப்பினர்
Similar topics
» சீனாவில் கூகுள் சிதைக்கப்பட்டது ஏன்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியம்
» மாயமான இளம் பெண்ணின் சடலம் சூட்கேஸில் கண்டுபிடிப்பு
» விண்வெளியில் சூரியனை விட 3 மடங்கு பெரிய கரும்பள்ளங்கள் கண்டுபிடிப்பு
» எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு) _
» போர்க்குற்றத் தகவல்களை இரகசியமாக வெளியிட்ட 6 இணையத்தளங்களை புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிப்பு - திவயின

Permissions in this forum:
You cannot reply to topics in this forum