அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலகக் கோப்பையில் யூ.டி.ஆர்.எஸ். முறை அமல்

Go down

உலகக் கோப்பையில் யூ.டி.ஆர்.எஸ். முறை அமல் Empty உலகக் கோப்பையில் யூ.டி.ஆர்.எஸ். முறை அமல்

Post by devid Thu Dec 09, 2010 10:16 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நாக்-அவுட் பிரிவில் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை (யு.டி.ஆர்.எஸ்.) அமல்படுத்தப்படவுள்ளது.

இப்போது யு.டி.ஆர்.எஸ். முறை பல்வேறு டெஸ்ட் போட்டிகளில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நாக்-அவுட் பிரிவிலிருந்து யு.டி.ஆர்.எஸ். முறையை அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: கால் இறுதி ஆட்டங்கள் முதல் யு.டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்தப்படும். 4 கால் இறுதி, 2 அரை இறுதி, ஒரு இறுதி ஆட்டத்தில் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றார் அவர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் கூட்டாக போட்டியை நடத்தவுள்ளன.
Email PrintDelicious Digg Facebook Twitter
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» அடுத்த உலகக் கோப்பையில் அணிகள் குறைப்பு: ஆன்டி பிளவர் எதிர்ப்பு
» தெரிந்து கொள்ளுங்கள்... ஒலிம்பிக்கில் 4 முறை பதக்கம் வென்றவர்
» உலகக் கிண்ண கிரிக்கெட்: அதிர்ச்சி தோல்விகள்-03
» உலகக் கோப்பைக்குப் பின் மஹேல ஜயவர்த்தனா ஓய்வு?
» உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை உற்சாகப்படுத்தும் பாடலை பாடியவர் மன்னிப்பு கோரினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum