அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை உற்சாகப்படுத்தும் பாடலை பாடியவர் மன்னிப்பு கோரினார்

Go down

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை உற்சாகப்படுத்தும் பாடலை பாடியவர் மன்னிப்பு கோரினார்  Empty உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை உற்சாகப்படுத்தும் பாடலை பாடியவர் மன்னிப்பு கோரினார்

Post by Admin Sun Feb 27, 2011 5:45 am

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை உற்சாகப்படுத்தும் விதத்தில் பாடிய பாடகர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். போட்டியில் விளையாடும் ஏனைய நாடுகளின் அணிகளுக்கு இந்தப் பாடல் வரிகள் பாதிப்பாக அமையும் என்ற காரணத்தினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிருப்தியை வெளிப்படுத்தியதையடுத்து அப்பாடல் தடை செய்யப்பட்டிருந்தது.
சில தமிழ்ச் சொற்களுடன் பிரதானமாக சிங்கள மொழியுடனான இந்த பொப் ஒளிநாடா பரவலாக வெளியிடப்பட்டிருந்தது.

"வாருங்கள் வாருங்கள்...' என்ற இப்பாடல் மேற்கிந்தியதீவுகளின் தென்னை மரங்களை முறித்தும் நியூஸிலாந்தின் சுறாக்களை முறியடித்தும் இந்திய மலைகளில் உறைந்திருக்கும் பனிகளை உருகச் செய்தும் அவுஸ்திரேலியாவிலுள்ள கங்காருகளுக்கு பறவைகளை விருந்தாக்கியும் வாருங்கள் என ஆதரவாளர்களை வலியுறுத்துவதாக அப்பாடல் அமைந்திருந்தது.

அத்துடன், ஆங்கிலேய அரண்மனைக் கூரையை நடுங்கச் செய்யுமாறு உறுதிமொழியை அளிப்பதாக அப்பாடல் அமைந்திருந்தது. மகாராணி எலிஸபெத்தின் வாசஸ்தலத்தைக் குறிப்பிடுவதாக அது ஊகத்தை ஏற்படுத்தியிருந்தது.

சிக்ஸர்களுடன் சொர்க்கத்தின் கூரையைத் தகர்க்குமாறு வரிகள் இடம்பெற்றிருந்தன. இந்தப் பாடகர் லகிரு பெரேரா ஆழ்ந்த கவலையையும் மன்னிப்பையும் வெளிப்படுத்தியுள்ளதாக சிட்னி மோர்னிங் ஹெரால்டை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் எந்தவொரு நாட்டையும் அவமதிப்பது தனது நோக்கமாக இருந்ததில்லை என்று லகிரு பெரேரா கூறியுள்ளார்.

சகல இலங்கையரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்காகவே இப்பாடலைத் தயாரித்ததாக அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்காரவின் பிரசன்னத்துடன் இப்பாடல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட போதிலும் தனியார் வானொலி, தொலைக்காட்சிகள் ஒலி, ஒளிபரப்புச் செய்திருந்தன.

இப்பாடலைத் தயாரிப்பதற்கான ஒளிநாடா அங்குரார்ப்பணத்துக்கு 5 மில்லியன் டொலர்கள் செலவாகியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

பங்களாதேஷ் இந்தியாவுடன் இணைந்து உலகக் கிண்ணப் போட்டியை இலங்கை நடத்துகின்றது. ஏற்கனவே விளையாட்டு இடம்பெறும் அரங்குகளில் சுலோக அட்டைகள், இசைக்கருவிகளுக்கு தடை செய்திருந்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. பின்னர் அத்தடை அகற்றப்பட்டுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum